எப்பேர்ப்பட்ட சூப்பர் ஸ்டார் என்றாலும் இப்போதெல்லாம் ஒரே ஒரு படம் போண்டி ஆனாலும் கதை கந்தலாகப் போய் விடுகிறது.
தேவையே இல்லாமல் ஏகப்பட்ட சீன் போட்டு ரஜினி இருபது கெட்அப்பில் வருகிறார் என்றெல்லாம் தம்பட்டம் அடித்தும் படத்தில் ரஜினியின் டிபிகல் மசாலா எதுவம் இல்லாததால் படம் பப்படம் ஆகிவிட்டது.
ரோபோவும் இதே மாதிரி ஆகிவிடுமோ என்று ஷங்கர் பயந்தால் கூட நியாயம் இருக்கிறது, ஆனால் லேட்டஸ்ட் தகவல்படி சௌந்தர்யா ரஜினியும் கூட தன்னுடைய சுல்தான் தி வாரியர் ஊத்திக்கொள்ளுமோ என அஞ்சுகிறாராம். அய்யா, இதுக்குதான் ரொம்ப ஆடக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க.
முதலில் தேவையே இல்லாமல் பில்டப் கொடுத்த இயக்குனர் வாசுவை எந்த படமும் இனி இயக்கக் கூடாது என்று சட்டம் போடவேண்டும், பிறகு சிறு வேடம் என்று தெரிந்தும் அடக்கி வாசிக்காமல் இருபது வேடம் என்றெல்லாம் பிலிம் காட்டிய ரஜினி இனிமேலாவது அடங்க வேண்டும், மூன்றாவது இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் இன்னும் டிஸ்கஸ் செய்கிறோமே நம்மை எல்லாம் கழுவில் ஏற்ற வேண்டும.
Comments