தசாவதாரம் படம் வந்து கோடி, கோடியாக வசூலித்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை (ஆடியோ மட்டும்) கொஞ்சம் கவனமாகக் கேட்க நேற்றுதான் சந்தர்ப்பம் கிட்டியது. ஹிமேஷ் ரேஷ்மயாவின் இசை ஒன்றும் ஓஹோ என்று இல்லாவிட்டாலும், பாடல்கள் காதுகளுக்கு பழகி விட்டதால் ஓகே என்றுதான் தோன்றியது.
இதில், பாப் ஷைலஜா மல்லிகா ஷெராவத்துக்காக பாடிய பாடல் செம பெப்பியாக (pep) வந்திருக்கிறது. இந்த பாடலின் லிரிக்சை (lyrics) கேட்டபோது செம தமாஷாக இருந்தது.
"மெக்ஸிகன் இரவுக்கு லெக்ஸிகன் நாந்தானடா" என்று ஒரு வரி. லெக்ஸிகன் என்றால் dictionary என்று நம் எல்லோருக்கும் தெரியும், அது என்ன மெக்ஸிகன் இரவு? ஒரு நடை மெக்ஸிகோ போகவேண்டுமென நினைக்கிறேன்.
அடுத்ததாக, "செப்டம்பர் லெவனன்று ட்வின் டவர்ஸ் சாய்ந்தது, என் டவர் சாயவில்லை" என்று ஒரு வரி. அட, அட, அட, என்ன ஒரு கவிதை? இந்த பாடல் எழுதிய மஹானுபாவன் யார் என்று தெரியவில்லை (வாலி என்று என் யூகம்), ஆனால், ஒரு சின்ன தப்பு. அதென்ன, "என் டவர்" என்று ஒருமை? அப்படியென்றால், இன்னொரு டவர்? அடபோங்கப்பா, எனக்கு போன் கால் வந்துவிட்டது.
Comments