Skip to main content

MRP எனப்படும் ஏமாற்று வேலை

நாம் எல்லோருமே தினசரி வாழ்கையில் பல பொருட்களை வாங்குகிறோம். கிட்டத்தட்ட எல்லா பொருட்களின் விலையையும் சரி பார்க்கிறோம். MRP எனப்படும் இந்த Maximum Retail Price (அதிக பட்ச சில்லறை விலை) க்கு மேல் அந்த பொருளுக்கு பணம் தர வேண்டிய நிலைமை வந்தால் வியாபாரியிடம் காரணம் கேட்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசாங்க உத்தரவின்படி எந்தவொரு வியாபாரியும் எந்த பொருளையும் இந்த MRP க்கு மேல் விலை வைத்து விற்கக்கூடாது என்று எதாவது சட்டம் அல்லது அரசாணை இருக்கிறதா என்றால், இருக்கிறது! Standards of Weights & Measures (Enforcement) Rules, 1985 என்ற சட்டபிரிவின் கீழ் MRP க்கு மேல் எந்தவொரு பொருளும் விற்கப்படக் கூடாது என்று இருந்தும் இதை யாரும் மதிப்பதில்லை. இப்படி ஒரு சட்டம் இருப்பது நம்மைப் போன்ற சாதரண மக்களுக்கு தெரியுமா என்றால்,ஆச்சரியமான உண்மை, பெரும்பாலும் இல்லை.

என்னுடைய வாரிசுகளுக்கு Pizza என்றால் மிகவும் பிடிக்கும். (பெற்றோரின் கஞ்சத்தனம் காரணமாக பல பெற்றோர் என்னுடைய குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம், பிஸ்சா ஆகிய எதுவுமே பிடிக்காது என்று சொல்லி தயிர் சாதம், இட்லி, தோசை தவிர வேறு எதுவுமே தெரியாத கிணற்று தவளைகளாக வளரும் குழந்தைகளை நான் அடிக்கடி பார்க்கிறேன். மேற்கண்ட பொருட்கள் எல்லாமே உடலுக்கு தீங்கு என்பதால் நாங்கள் அவற்றை எங்கள் பிள்ளைகளுக்கு வாங்கித் தருவதில்லை என்ற வீண் வாதம் பற்றி நாம் இங்கு பேசப் போவதில்லை).

சமீபத்தில் டொமினோஸ் பிஸ்சா ஆர்டர் செய்துவிட்டு (பெரும்பாலான பிஸ்சா தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 65% வியாபாரத்தை Home Delivery மூலமே முடித்து விடுகிறார்களாம்) அது வீட்டுக்கு வந்தபோது அதன் கூட வந்த கோகோ-கோலா (600 ml) பாட்டிலின் MRP யை பார்த்தபோது Rs.30/- என்று அச்சாகியிருந்தது. வெளியே வாங்கும் 2 லி பாட்டின் விலை ரூ.50/- இதன்படி பார்த்தால் ஒரு லிட்டரின் விலை ரூ.25/- தான். அப்படியிருக்க 600 மிலி விலை எப்படி ரூ.30/- ஆகும் என்று கேட்டால் அதற்கு பதில் பாட்டிலின் மேல் இருக்கும் லேபலில் இருக்கிறது. MRP ரூ. 30/- என்றுதான் அச்சாகியிருக்கிறது. அந்த 600 மிலி பாட்டில் டொமினோஸ் பிஸ்சாவுக்கென்று தயாரான பாட்டில். சட்டத்தை எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். நாம் ஒரு நாள் தெரியாமல் one-way இல் புகுந்துவிட்டால் சட்டத்தை மீறிய குற்றமாகி போலீசுக்கு தண்டம் அழ வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம்.

கிட்டத்தட்ட எல்லா தியேட்டர்களிலும் இந்த மாதிரி பகல் கொள்ளை நடக்கிறது. பல ரெஸ்டாரன்ட்களில் நாம் சிற்றுண்டியுடன் மினரல் வாட்டர் கேட்கும்போது, அதற்கான பில் தொகையை பார்ப்பதில்லை. பார்த்தால் வெளியே சாதாரணமாக ரூ.10 க்கு விற்கப்படும் அந்த மினரல் வாட்டரின் விலை சுமாராக ரூ.20 அல்லது ரூ.25 க்கு உங்களுக்கு பில்லில் வந்திருக்கும்.

தண்ணியில் மட்டுமில்லை, எல்லா நுகர் பொருட்களிலும் (consumer goods) இந்தமாதிரி கொள்ளை நடக்கிறது. MRP என்பதை பேசாமல் Minimum Retail Price என்று மாற்றிவிடலாம். நம்முடைய பேதை மனம் அப்போதாவது சமாதானம் ஆகுமா என்று பார்க்கலாம்.

Comments

Unknown said…
தண்ணி, பீட்ஸா போன்ற மேல் தட்டு வர்க்க வஸ்துக்களுக்கு MRP என்பது Minimum Recommended price ஆக இருக்கும். துவரம் பருப்பு; உளுத்தம் பருப்பு போன்ற மத்திய தர வர்க்க சாமான்கள் எல்லாமே (underline) எல்லாமே MRP விட குறைந்த விலையிலேயே கிடைக்கிறது.
Unknown said…
மேலும் இது போன்ற வஸ்துக்களை வாங்கும்போது அவன் கேட்கும் விலையை வாயையும் அதையும் பொத்திக்கொண்டு கொடுத்துவிடுவோம். ஆனால் செருப்பு தைப்பவனிடம் பேரம் பேசுவோம். நான் ஒருமுறை செருப்பு தைக்க நின்றுகொண்டிருந்தபோது எனக்கு முன் இருந்தவர் "அதே ஊசி தான் வைத்திருக்கிறாய். நூலும் விலை ஏற வில்லை. ஆனால் தைப்பதற்கு மட்டும் ஏன் பத்து ரூபாய் கேட்கிறாய்" என்றவாறே என்னை பார்க்க நான் , " ஆனால் அரிசியும் பருப்பும் விலை ஏறி விட்டது. அதே அரிசியையும் பருப்பையும் தானே அவனும் வாங்கி சாப்பிட வேண்டும் என்றேன்". சொன்னவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்