வில் ஸ்மித் நடித்து 1998 இல் வெளிவந்த இந்த படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Tony Scot இந்த படத்தின் டைரக்டர்.
இவர் ஏற்கனவே பல வெற்றிப் படங்களை இயக்கியவர். அவற்றில் சில: Crimson Tide (Denzel Washington & Gene Hackaman), Last Boy Scout (Bruce Willis), Days of Thunder, Top Gun (இரண்டிலும் ஹீரோ Tom Cruise), Man on Fire, Deja' Vu (இரண்டிலும் ஹீரோ Denzel Washington)
படத்தில் வரும் Jon Voight அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி எல்லோருடைய தொலைபேசிகளையும் ஒட்டு கேட்கலாம், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வர ஆசைப்படுகிறார். இதற்கு தடையாக இருக்கும் செனட்டர் (நம் ஊர் MP போல) ஒருவரைப் போட்டு தள்ளுகிறார். இது ஒரு ஏரியின் அருகே நடக்கும் போது, அங்கு வரும் பறவைகளை கண்காணிக்கும் ஒருவரால் வைக்கப்படும் வீடியோ கேமரா அதை துல்லியமாக படம் எடுத்துவிடுகிறது. இதை அறியும் Jon Voight இன் அடியாட்கள் அந்த வீடியோவை பறிக்க முயலும் போது அதை படம் எடுத்தவர் விபத்தில் இறந்து விடுகிறார். இறப்பதற்கு முன் ஒரு கடையில் வில் ஸ்மித் ஐ பார்க்கும் போது, அவருக்கு தெரியாமல் அவர் பையில் அந்த வீடியோ காசெட்டை போட்டுவிட, வில் ஸ்மித் ஐ சனி பிடிக்கிறது.
வில் ஸ்மித் ஏற்கனவே ஒரு இத்தாலிய தாதாவால் ஒரு கேசில் மிரட்டபடுகிறார். இந்த வீடியோ கேசட்டால் அடுத்தடுத்து அவர் கஷ்டங்களை அனுபவிக்கிறார்; வேலை போகிறது, முன்னாள் காதலி கொல்லப்பட்டு அந்த பழி இவர் மீது விழுகிறது, மனைவி அவரை வீட்டைவிட்டு விரட்டுகிறார், கிரெடிட் கார்டுகள் தீடீரென காலாவதி ஆகின்றன, இவ்வளவு போதாதா அவர் பழி வாங்க?
எதற்காக என்று தெரியாமல் இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவிக்கும் அவர், Gene Hackman ஐ சந்திக்கும் போது எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்கிறார். பிறகு முக்கிய வில்லன் Jon Voight ஐ அவருடைய பாணியிலேயே சென்று பழி வாங்குகிறார்.
1998 இல் வெளி வந்த இந்த படம், அதிகபட்ச technology யால் வரும் தீமைகளை ரொம்ப அழகாக விவரிக்கிறது. அமெரிக்காவின் அத்தனை satellites ஐயும் வைத்துக்கொண்டு வில்லன் கதாநாயகனை விரட்டும் போது ஆரம்பிக்கும் வேகம் கடைசி frame வரைக்கும் தொடர்கிறது.
வில் ஸ்மித்தின் எல்லா படங்களிலும் இருக்கும் நக்கல் (black humour) இந்த படத்திலும் இருக்கிறது. உதாரணத்திற்கு சில: தன்னுடைய பல பொருட்கள் திருட்டு போனாலும், தன்னுடைய blender (நம்மூரில் மிக்சி) காணாமல் போனதற்கு புலம்பும் அவர், கடைசியில் வில்லனின் வேனில் அதை பார்த்தவுடன் தான் பட்ட அடிகளை மறந்து விட்டு "இதோ என் blender," என்கிறார், வில்லனின் ஆள் நக்கலாக, " இந்த வேலையை முடித்துவிட்டு வா, இதை gift pack செய்து வைக்கிறேன்," என்கிறான்; Gene Hackman காரில் வரும்போது, "எனக்கு டயப்டீஸ் இருப்பதால் அவ்வப்போது ஏதாவது சாப்பிடாவிட்டால் கொஞ்சம் cranky ஆகிவிடுவேன்," என்பதற்கு, "சாப்பிடவிட்டால்தானா?" என்று சொல்லி கலாய்க்கிறார்;வில் ஸ்மித்தின் மனைவி அவரிடம், "என்னைத் தவிர உன் வாழ்க்கையில் வேறு பெண்களுக்கு இடம் இல்லைதானே?" என்று கேட்பதற்கு, " ஆமாம், உன்னையும் Janet Jackson (Michael Jackson தங்கை, பிரபல பாடகி) ஐயும் தவிர வேறு யாருமில்லை," என்கிறார்.
படம் முழுக்க இருக்கும் வேகம் ஒரு அருமையான த்ரில்லரைப் பார்த்த திருப்தியைத் தருகிறது.
Comments