நேற்று இரவு IPL இரண்டாவது semi-finals பார்த்தவர்களுக்கு ஒரு உண்மை புலப்பட்டிருக்கும். இத்தனை நாளும் அலட்டிக் கொண்டு திரிந்த யுவராஜ் சிங், தோற்ற பிறகும் அலட்டலை குறைத்து கொள்ளவில்லை. வாய் திறந்து தோனியை பாராட்டும் பண்பாடு வரவில்லை. இது இன்று நேற்று ஆரம்பித்த ego clash அல்ல. தோனியை இந்திய அணிக்கு கேப்டனாக அறிவித்த நாள் முதல் புகையும் ஒரு விஷயம். யுவராஜ் சிங்கின் தந்தை ஒவ்வொரு சானலாக பேட்டி கொடுத்து 'என் மகனுக்கு என்ன குறை, என் அவனை கேப்டனாக்கவில்லை?' என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
யுவராஜும் தன் பங்கிற்கு எந்த ஒரு ODI போட்டியிலும் சரியாக விளையாடாமல் சொதப்பிக் கொண்டிருந்தார். IPL இந்த சமயத்தில் சரியாக கை கொடுத்தது. ஆரம்பத்தில் சொதப்பிய அணி பிறகு வெகுவாக பிக்-அப் செய்தது.
கிங்க்ஸ்-11 அணி வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்தது. எதற்கெடுத்தாலும் தோனியை நக்கல் செய்யும் யுவராஜ் அவருடைய அணியின் வெற்றிக்கு பெரிதும் துணையாய் இருந்தது ஷேன் மார்ஷ் மற்றும் ஹோப்ஸ் ஆகியோரின் பேட்டிங், மற்றும் பியுஷ் சாவ்லா, இர்பான் பதான் ஆகியோரின் பௌலிங் என்பதை உணர்ந்திருந்தாரா என்பது பெரிய கேள்விகுறி.
இன்று நடக்கவிருக்கும் இறுதி போட்டியில் செமத்தியாக சீன் போட்டுக் கொண்டு திரியும் ஷேன் வார்னுக்கு தோனி ஆப்பு வைக்க வேண்டுமென நினைக்கிறேன். ஷேன் வாட்சன் மற்றும் யுஸுப் படான் பேட்டிங் மற்றும் ஷேன் வாட்சன், தன்விர் ஆகியோரின் பௌலிங் ஆகிய இரண்டையும் தோனி & கோ சமாளித்து விட்டால் பிறகு பிரச்சினை இல்லை. க்ரீம் ஸ்மித் இல்லாதது சென்னை அணிக்கு கூடுதல் பலம்.
பார்க்கலாம், இந்த தோனி (தோணி) சென்னை டீமை கரை சேர்க்குமா என்று.
Comments