Skip to main content

சுப்ரமணியபுரம் திரைப்பட பாடல்கள்:








இந்த படத்தின் மேல் எனக்கு எந்த ஸ்பெஷல் காதலும் இல்லை. ஜேம்ஸ் வசந்தன் முதன் முறையாக இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் ஆல்பம் ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஈவண்ட் மேனேஜர் என்ற முறையில் கலந்துகொண்டேன். சுப்ரமணியபுரம் என்பது மதுரையில் நான் வாழ்ந்த பகுதி. என் கல்லூரி காலம் கழிந்த பகுதி என்பதால் ஒரு ஆர்வம். படத்தின் கதைக் களமும் அதே மதுரையைச் சேர்ந்த சுப்ரமணியபுரம் என்பதால் இன்னும் ஈடுபாடு அதிகரித்தது.

படத்தில் தெரிந்த ஒரே முகம் கஞ்சா கருப்பு ஒருவர்தான். '80 களில் நடந்த கதை என்பதால் படத்தில் வரும் ஆண்கள் எல்லோரும் bell bottoms அணிந்து கொண்டு, நிறைய முடியுடன் ஓரளவுக்கு ரியலாக இருக்க முயன்று இருந்தார்கள்.

படத்தின் இயக்குனர் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்ததால் நிறையவே எதிர்பார்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

பாடல்கள் பற்றி சொல்கிறேன்.

ஏ ஆர் ரஹ்மானின் தயவால் ஆரம்பித்த ஒரு குளறுபடி யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற ஒரு நிலை. ஒரு பக்கம் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம் என்றாலும், தமிழே கொஞ்சம் கூட தெரியாத, அல்லது இன்னும் அவலமான விஷயமாக தமிழே உச்சரிக்கத் தெரியாத இளைஞனோ அல்லது இளைஞியோ பாடலைக் கடித்து குதறி அது மிகப் பரிதாபமாக வெளியே வருகிறது.

ஜேம்ஸ் வசந்தனும் தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். இந்த படத்தில் வரும்:
-முதல் பாடல், 'காதல் சிலுவையில் அறைந்தாய் என்னை' என்ற ஷங்கர் மஹாதேவன் பாடிய பாட்டு ரொம்ப சுமார் ரகம், ஷங்கரின் மதுரமான குரல் ஒரே ப்ளஸ் பாய்ண்ட்
-இரண்டாவது பாடல், 'கண்கள் இரண்டால்' என்ற ஹிட் பாட்டு. பெல்லி ராஜ், தீபா மரியம் என்று இருவர் பாடியது. இந்த பாடலின் வித்தியாசமான மெட்டு நன்றாக இருக்கிறதே என்று யோசித்தபோது, பல்லில் எதோ உறுத்துகிறதே என்று பார்த்தால், இந்த மெட்டு வெகு பல வருஷங்களுக்கு முன் சிவகுமார், ஸ்ரீதேவி நடிப்பில் (படம் பெயர் ஞாபகமில்லை) வந்த Dr பாலமுரளி கிருஷ்ணா பாடிய 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்'(இளையராஜாவின் இசையில் வந்த இந்த பாடல் அப்போது மிகப் பிரபலம்)என்ற மெட்டோடு அப்படியே ஒத்துப் போகிறது. சரி, இன்ஸ்பிரேஷேன் என்று வைத்துக் கொள்ளலாம், காப்பி என்று சொல்லவேண்டாம் (பாவம், ஜேம்ஸ் வசந்தன் முதல் படம் என்பதால் பாடல் ஹிட் ஆகவேண்டிய கட்டாயம்).

சரி அடுத்த பாடல் என்று யோசிக்குமுன் திரும்பவும் எதோ உறுத்தியது. அட, பாக்கு கூட வாயில் போடவில்லையே என்று பார்த்தால், அதே மெட்டில் இன்னொரு பாடலின் சாயலும் தெரிந்தது. இதுவும் இளையராஜா இசை அமைத்த பாடல்தான், 'தலையை குனியும் தாமரையே' என்ற பாடல். பற்பல வருடங்களுக்கு முன் திசை மாறிய பறவைகள் என்ற படத்தில் சரத் பாபு, பருமயமாக இருக்கும் சுமலதா என்ற நடிகையை பார்த்து பாடுவார்.

அடுத்த பாடல் பென்னி தயால் என்பவர் பாடிய 'தேநீரில் சிநேகிதம்' என்ற பாடல். ஓகே ரகம்.

அடுத்த பாடல், 'மதுர குலுங்க, குலுங்க' என்ற குத்துப் பாடல். சுசித்ரா, வேல் முருகன் மற்றும் மதுரை (!) பானுமதி ஆகியோர் பாடிய பாடல்.

அப்படியே மதுரை மண்ணின் மணத்துடன், தாரை தப்பட்டை முழங்க, செமத்தியான கிராமியப் பாடல். ஒரே ஒரு குறை என்னவென்றால் எல்லாப் பாடல்களிலும் (ஷங்கர் மஹாதேவன் பாடல் விதிவிலக்கு) பாடுபவர்கள் புயலை புயள் என்றும், முயலை முயள் என்றும், பள்ளியை பல்லி என்றும், கல்லை கள் என்றும், மல்லிகை என்பதை மள்ளிகை என்றும் பாடி வெறுபபடிக்கிறார்கள். அதுவும் இந்த பாடலில் கடைசியில் அம்மா, வீரம்மா காளி, எங்க அம்மா வீரம்மா காளி என்பதை 'வீரம்மா காலி' என்று பாடுவது கொடுமையின் உச்சம்.

வீரம்மா காளியையே காலி பண்ணிவிட்டால் அப்புறம் நாமெல்லாம் எம்மாத்திரம்?

Comments

RC SEKAR said…
Sridhar,

Chinna kannan song is from the movie"KAVIKUIL".

"Thalayai kuniyum thamaraye"is from "Oru Odai Nadhiyagiradhu" (Raghuvaran as hero) and not the one you have mentioned.

Your comments about both the songs are perfect. Both these songs are set in a classical raga called "Reethigowla" set by none other than our Ilayaraja.

Obviously, 'Kangal irandal' from Subramaniapuram is also set in the same raga. Copied or retuned well by James Vasanthan.

Those who had their college life in 70-80's will really enjoy this movie. It is a real nostalgia...

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...