என்னுடைய குழந்தைகளுக்கு எக்ஸாம்ஸ் முடியவேண்டும் என்ற காரணத்தினால் கடந்த இரண்டு மாதங்களாக ஆங்கில படம் dvd எதுவுமே பார்க்காமல் (என்ன ஒரு தியாகம்!) இருந்த நான், தற்போது சுதந்திர மனிதனாகி, சமீபத்தில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய, அள்ளாத சில அருமையான படங்களை பார்த்தேன். தினமும் இரவு, சகட்டு மேனிக்கு படங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் சில gems இருந்த படியால் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணம். -முதலில் Run Lola Run என்ற ஜெர்மானியப் படம் (ஆங்கில டப்பிங் மற்றும் வாய்ஸ் ஓவர்). 1998 ம் வருடம் வந்த இந்த அருமையான படம், பத்து வருடங்களுக்கு முன்னமே என்ன ஒரு சிந்தனை! படம் அட்டகாசமான இசை, ஒளிப்பதிவு, இயல்பான நடிப்பு என எல்லா department களிலும் ஸ்கோர் ஓ ஸ்கோர் செய்கிறது! கதையின் நாயகி லோலா, அவள் நண்பன் மானி, மற்றும் அவள் தந்தை, ஒரு பிச்சைக்காரன் என்று மிக சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு சும்மா கபடி விளையாடியிருக்கிறார் இயக்குனர்! மானி கஞ்சா விற்கிறான், விற்ற பணத்தை தொலைக்கிறான். 100,000 மார்க்! (அப்போதைய ஜெர்மானிய கரன்சி) . கஞ்சா வியாபாரி தன்னை தீர்த்து விடுவான் என்ற பயத்தில் லோல...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!