என்னுடைய வேண்டுகோளை ஏற்று குடும்பத்துடன் இன்று (30/12/07) Hotel Breeze க்கு வருகை தந்த நம் "ரம்யா" நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றி.
ஷங்கர் வர முடியாத காரணத்தால் என் சிங்கப்பூர் பயணத்தின் போது ரவி மற்றும் ஷங்கர் குடும்பத்துடன் ஒரு மாலைப் பொழுது "ராஜ்" என்ற பெங்காலி ரெஸ்டாரன்ட்டில் 24 Dec அன்று நன்றாக கழிந்தது.
பிறகு இன்று Breeze Hotel களைகட்டியது. குமார், செழியன், பாண்டியன் மற்றும் முருகன் தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியாமல் போனது வருத்தம் என்றாலும், மற்ற அனைவரும் வந்து சேர்ந்தது ஒரு மிக மகிழ்ச்சியான விஷயம்.
நம்முடைய மனைவியர் நிறைய பேர் ஒருவருடன் ஒருவர் அறிமுகமே இல்லாமல் இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் உடனே பழக ஆரம்பித்தது மிகவும் ஒரு நல்ல விஷயம். குழந்தைகளும் அப்படியே.
ஸ்ரீதர் நேற்று என்னுடன் அலைபேசி மூலம் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி மும்பையில் இருப்பதாகவும் முடிந்தால் கலந்து கொள்வதாக சொல்லி இருந்ததால் என்னுடைய எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. பிறகு ஒரு sweet surprise ஆக அவன் குடும்பத்துடன் கலந்து கொண்டான்.
குஞ்சிதபாதம், Berger ரவி, சேகர், சாயீ, நரசிம்மன், ராஜ்குமார் ஆகிய எல்லோருமே முழு மனதுடன், குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் "Highlights":
-நண்பன் ராஜ்குமாரின் இரண்டாவது பெண் வரிணி ( 2ம் வகுப்பு) அமர்க்களமாக பாட்டுக்கு மேல் பாட்டு பாடியது.
-சேகரின் மகன் சாயீ சரண் கிடுகிடுவென போர்டில் படம் வரைந்தது.
-ராஜ்குமார் மைக் பிடித்து "உறவுகள் தொடர்கதை" என்ற அருமையான K J யேசுதாஸ் பாடலை (படம்-அவள் அப்படித்தான்) நன்றாக பாடியது.
-கிட்டத்தட்ட எல்லாருடைய பெண் வாரிசுகளும், ரவியின் முதல் மகன் ராகவும் சரளமாக பாடியது.
இந்த சந்திப்பில் சிங்கப்பூர் ரவி, ஷங்கர், குமார், செழியன், முருகன், பாண்டியன் மற்றும் வாசு ஆகியோரை மிக மிக miss செய்தோம்.
எல்லோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். 2008 ம் ஆண்டு வளம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.
Comments
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக
தூமகேதுர் கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜாநந:
வக்கரதுண்ட: சூர்பகர்னோ ஹேரம்ப ச்கந்தபூர்வஜ:
These are the sixteen Ganapathi namavali which if recited every day shall remove us from all hurdles in life.