என்னுடைய பெசன்ட் நகர் office building owner சமீபத்தில் தொலை பேசி, "நண்பரே, என் வீட்டில் ஒரு பஜன் ஒன்றுக்கு யாராவது நல்ல பிரசங்கி (பேச்சாளர்) ஒருவரை ஏற்பாடு செய்ய முடியுமா, அவர் ஒரு பக்திமயமான topic பற்றி ஒரு கால் மணி நேரம் பேச வேண்டும் " என்றார். நான், "ஐயா, நான் event manager தானே தவிர பஜன் manager அல்ல," என்று மறுத்து விட்டேன்.
பிறகு தீடீரென நம் ரவி ஞாபகம் வந்ததது. உடனே அவனுக்கு விஷயத்தைச் சொன்னேன். ஆரம்பத்தில் மறுத்தவன் , பிறகு சம்மதித்தான்.
நேற்று (15/12) மாலை, என் office building owner வீட்டில் ஜகஜ்ஜோதியாக "தடைகளை அகற்றும் பிள்ளையார் (Vinayaka-Vigna Vinasaka) " என்ற பெயரில் ஒரு அட்டகாசமான உரை நிகழ்த்தி அசத்திவிட்டான். ரவியின் பக்திமயமான பேச்சை பலபேர் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.
ஒரு விஷயம்: அங்கு வந்த கூட்டம் ஒன்றும் பெருமாள் கோவிலில் புளியோதரை வாங்கி தின்னும் கூட்டம் இல்லை. எல்லோருமே மிக, மிக நல்ல பதவிகளில் இருக்கும் IAS, IFS, Consulate, Foreign Trade ஆசாமிகள்.
ரவிக்கு என் பிரத்யேக நன்றி (special thanks). காலப் போக்கில் மாற்றங்கள் எதுவும் நிகழலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
நம்மில் சிலர் உண்மையிலேயே நல்லவராகிவிட்டார்கள் விட்டார்கள் என்பதை இது மேலும் வலுப்படுத்துகிறது.
Comments