மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் மற்ற இஸ்லாமிய நாடுகளின் கெடுபிடிகள் இல்லை. எங்கெங்கு நோக்கிடும் கருப்பு பர்த்தாக்கள் இல்லை. அங்கங்கே தீடிரென தொழுகை நேரத்தில் அல்லா.... என்று அலறும் ஸ்பீகர்கள் இல்லை.ஹைதராபாத் நகரெங்கும் தீவிரவாதிகளா பொதுமக்களா என இனம் பிரிக்க முடியாமல் பட்டாபட்டி பைஜாமாக்களில் அலையும் ஆஜானுபாகர்கள் இங்கு இல்லை.
இஸ்லாமிய நாடு என்பதற்கு முக்கிய அடையாளமான மதுவிலக்கு தீவிரமாக இல்லாவிட்டாலும் மதுபானங்கள் விற்கும் கடைகளை மிக, மிக அரிதாகவே காண முடிந்தது. அதுவும் நாங்கள் போன நேரம், ரம்ஜான், ஹரிராயா ஆகிய முக்கிய விரதங்களுடன் கூடிய பண்டிகைகள் முடிந்த நேரம் என்பதால், தண்ணீருக்கு பதிலாக சர்வ சாதாரணமாக கிடைக்கும் பீர் வகைகளை மட்டும் பார்க்க முடிந்தது.
நரசிம்மன் எப்படியோ மோப்பம் பிடித்து ஒரு cold storage கடையைக் கண்டுபிடித்த பின்தான் பெருமூச்சு விட்டோம். KLCC உள்ளே ஒரு அருமையான ரெஸ்டாரன்ட் இருக்கிறது, முதல் நாள் அதில் ஒரு அமர்க்களமான லேட் லஞ்ச் சாப்பிட்டோம். பிறகு இலக்கில்லாமல் ஊர் சுற்றி விட்டு, ஹோட்டல் வரும்போது கால் வலியோ வலி. எங்கள் அதிர்ஷ்டம், மிக அருகாமையில் ஒரு தமிழ் ரெஸ்டாரன்ட், அதுவும் மதுரை ரெஸ்டாரன்ட்! விடுவோமா? பின்னிப் பெடலெடுத்து விட்டோம். சுவையும் ஓஹோ!
மறு நாள் காலையில் ஜென்டிங் சென்றுவிட்டு திரும்பும் போது, நான் "ஐ ஆன் மலேசியா" போகலாம் என்று சொன்னதன் பேரில், அங்கு சென்றோம். "ஐ ஆன் லண்டன்" மாடலில் KL சிட்டியில் ஒரு பிரமாண்டமான சக்கரத்தில் ஏற்றி மேலே போகவிட்டு நகரத்தின் இரவு அழகை ரசிக்க விடுகிறார்கள். சிங்கப்பூர் திரும்பிய போது அதே போல ஒரு ராட்சச சக்கரம் அங்கும் ரெடி ஆகிக்கொண்டிருக்க, ரவி அது ஜனவரி 2008 இல் ரெடி ஆகுமென்றும், சிங்கப்பூர் மக்கள் அதற்குள் மறை கழண்டு ஜூலை 2008 வரை புக் செய்ததாகக் கூறிய போது என்ன கொடுமை சார் இது? என்று (சென்னை 600028 பாணியில்) கேட்கத் தோன்றியது.
KL நகருக்கு வெகு அருகாமையில் ஒரு அழகான முருகன் கோவில், மலை மேல் இருக்கிறது. Batuk caves எனப்படும் இந்த குகையில், உயரத்தில், மிக அழகான முருகன் என்றும், தைப் பூசத்தின் போது KL நகரமே அல்லோலகல்லோலப் படும் என்று கேள்விப் பட்டு போகலாமா என்று நரசிம்மனிடம் கேட்க, எவ்வளவு படிகள் என்று எதிர் கேள்வி வந்தபோது 276 படிகள் என்றேன். சான்ஸே இல்லை என்று நரசிம்மன் சொன்னதால், பாவப்பட்ட இரண்டு ஜீவன்களை முருகன் ரட்சிக்கும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.
மறுபடியும் சந்திக்காமலா போய்விடப் போகிறேன், அதாவது, Batuk Caves முருகனை! ஒகே, மறுபடியும் மற்றொரு blog மலருடன் வருகிறேன்.
Comments