கடந்த சனி (15/11/07) நடந்த மறக்க முடியாத சந்திப்பின் கடைசி நேரத்தில் முருகன் பாண்டியில் இருந்து வாங்கிவந்த Mansion House சோமபானம் கொஞ்சம் மிஞ்சி விட்டது. அவசரத்தில் நம் நண்பன் Berger ரவியின் காரில் அது தவறுதலாகப் போய்விட்டது. ரவியைப் போன்ற நல்ல மகான்கள் கெட்ட பேர் வாங்கிவிடக்கூடாது என்று நரசிம்மன் சொன்னதன் பேரில் ரவியிடம் விசாரித்தபோது, ரவி சொன்ன பதில் புல்லரிக்கவைத்தது. எனக்கும் ரவிக்கும் அலைபேசி (mobile phone) மூலம் நடந்த பேச்சு இதோ:
நான்: ரவி, சாரிமா, நேத்து ஞாபகம் இல்லாம உன் வண்டியில சரக்கு பாட்டில் போயிடுச்சு, அத பாத்தியா?
ரவி: ம், பாத்தேனே
நான்: அடப்பாவி, அது எங்கடா?
ரவி: ஒ, அதுவா? நேத்து குமார ட்ராப் பண்ணிட்டு கிளம்பும்போதுதான் கவனிச்சேன், குமார் ஒக்காந்த சீட் மேல கெடந்தது, குமார் போதைல அதைக்கூட கவனிக்கல. நாந்தான், அங்க ரோடு ஓரமா அந்த ராத்திரி குளுருல வேல பாத்துகிட்டு இருந்த ஒரு carpenter கிட்ட கொடுத்தேன், அவன் என்ன தெய்வமேன்னு பாத்தான்
நான்: அடப்பாவி!
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே, முல்லைக் கொடிக்கு தேர் தந்த பாரி வள்ளலையும் மிஞ்சிவிட்ட நம் நண்பன் ரவிக்கு ஜே!
Comments
vASU