நண்பர்களே, என்னதான் ஆங்கிலம் பகட்டு மொழி என்றாலும் தமிழில் பேசும் போது வரும் அன்னியோனியம் ஒரு தனி சுகம்.
கடல் கடந்து இருக்கும் நம் ரவி, குமார்,அடிக்கடி கடல் கடக்கும் ஷங்கர் போன்ற நண்பர்கள் தமிழ் மொழி மேல் மேலும் காதல் வளர இந்த தமிழ் blog செய்திகள் உதவும் என்று நம்பி பிள்ளையார் சுழியுடன் ஆரம்பிக்கிறேன்.
சிங்கப்பூர் ஒரு மகத்தான நகரம், ஆறேழு முறை சென்றும் அலுக்கவில்லை என்பதுதான் நிஜம், ஒரு சக்தி வாய்ந்த காந்தம் போல என்னை இழுத்துக்கொண்டே இருக்கிறது என்பது உண்மை. மேலும் ரவி அங்கு வசிப்பதால் அதிக இஷ்டம். நல்ல நண்பர்கள் பத்து பேருடன் செல்லவேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாக இருந்தும் நிறைவேறாமல் போய்க்கொண்டிருந்ததால் சட்டென முடிவு எடுத்து போன வாரம் போய் வந்து விட்டோம்.
மலேசியா தற்போது 50 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து, கோலாலம்பூர் ஜே ஜே என இருக்கிறது. கோபால் பல்பொடி விளம்பரம் போல சிங்கப்பூர், மலேசியா ஆகிய ஊர்களில் நமது புகழ் பரவ என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துவிட்டு வந்தோம். என்ன செய்தோம் என்பது என் அடுத்த blog மலரில்...காத்திருங்கள், நண்பர்களே, காத்திருங்கள்.
Comments