Skip to main content

Posts

Showing posts from March, 2019
வணக்கம்  எழுத்தாளர் சுஜாதா முகநூல் பக்கம் / புதிய புத்தக அறிமுகம்..... கிட்டத்தட்ட இரண்டரை கால இடைவெளிக்குப் பிறகு உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி.... மறைந்த எழுத்தாளர் சுஜாதா மீதுள்ள அளவிடமுடியாத ஈடுபாட்டால், விளையாட்டாக ஆரம்பித்த சுஜாதா பற்றிய முகநூல் பக்கம் இன்று 11,000 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள குழுவாக ஆலமர வளர்ச்சி கொண்டுள்ளது. நிறைய சுஜாதா வாசகர்கள் தவிர புகழ்பெற்ற எழுத்தாளர்களான இரா.முருகன், சுஜாதா தேசிகன், ( சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி) எழுதிய ரஞ்சன், பழம்பெரும் நடிகர் பாரதி மணி, ஜெயராமன் ரகுநாதன் உள்ளிட்ட பல முக்கிய சுஜாதா ஆர்வலர்களும் இந்தக் குழுவில் இணைத்துள்ளனர். குழு ஆரம்பித்த கடந்த சில மாதங்கள் முன் வரை, சுஜாதா எழுதிய / அல்லது / அவர் பற்றிய பதிவுகளை மட்டுமே இந்த முகநூல் பக்கத்தில் அனுமதித்து வந்தோம். இப்போது, புதியவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் குழு அங்கத்தினர்களின் கதைகள் / கட்டுரைகள் / கவிதைகள் ஆகியவையும் இடம் பெறுகின்றன. குழுவில் இணைய சுட்டி:  அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு இதே ஊக்கத்தில், முதன்முதலாக நானும் ஒர...