லண்டனிலிருந்து வெளிவரும் லான்செட் (Lancet) என்ற மருத்துவ இதழ் உலகப் புகழ்பெற்றது. இதில் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்காக செல்லும் அனைவரையும் அச்சுறுத்தும் வண்ணம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மூலம் எந்த மருந்துக்குமே கட்டுப்படாத ஒரு புதிய வகை நோய் தொற்றுக் கிருமி (NDM-1, Super bug) உலகமெங்கும் வேகமாகப் பரவுகிறது என்ற செய்திதான் இந்த பரபரப்புக்குக் காரணம். இதில் பெரிய வேதனை என்னவென்றால் இதை எழுதிய விஞ்ஞானிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த கார்த்திகேயன் குமாரசாமி என்பவர். இந்த கட்டுரையின் உள்நோக்கம் என்னவாக இருந்தாலும் இந்தியாவைச் சேர்ந்த தலை சிறந்த விஞ்ஞானிகள் பலர் இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்திய விஞ்ஞானி கார்த்திகேயன் குமாரசாமி உடனே புத்திசாலித்தனமாக இந்தக் கட்டுரையில் இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்குடன் தான் எதுவும் எழுதவில்லை என்றும், அவை தன்னுடைய கவனத்திற்கு வராமல் வேறொரு விஞ்ஞானியால் எழுதப்பட்ட...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!