Skip to main content

தமிழில் பதிய....

என் நண்பர் சுவாமி என்கிற சிவா என்னுடைய blog எழுதுவது பற்றிய பதிவைப் படித்து விட்டு, நிறைய பேர் தமிழ் மொழியில் பதிவு செய்ய கஷ்டப்படுகிறார்கள் அது எப்படி என்று சொல்லிவிடுங்கள் எனக் கேட்டிருந்தார். blog பதிவுக்கு முதல் தேவை ஒரு ஜி-மெயில் ஐடி, பிறகு ஒவ்வொரு முறை நீங்கள் பதிய நினைக்கும் போதும் நியூ போஸ்ட் என்பதைக் கிளிக்கினால் ஒரு விண்டோ திறக்கும். அதில் நீங்கள் தமிழில்  பதிவு செய்ய வேண்டுமெனில் அந்த விண்டோவின் தலையில் இருக்கும் பல்வேறு பட்டன்களில் "அ" என்ற எழுத்து இருக்கும். தமிழில் டைப் செய்யவேண்டிய வார்த்தை 'vanakkam" என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்பி விட்டு, அதை மௌஸ் மூலம் செலக்ட் செய்துவிட்டு பின் அந்த "அ" பட்டனை அழுத்தினால் அது தமிழ் வணக்கமாக மாறி விடும். இது முதன்முதலில் நீங்கள் தமிழில் டைப்பும் போது மட்டும். இதன் பிறகு எந்த வார்த்தையை வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் டைப்பி விட்டு பிறகு CTRL G அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடும். 

இதில் சில நடைமுறை கஷ்டங்கள் உள்ளன. உதாரணமாக நீங்கள் சிங்கப்பூர் என தமிழில் டைப் செய்ய விரும்பினால் அதற்கு "Singapore" என டைப் செய்யக் கூடாது. இது தமிழில் "சிங்கபோரே" என மாறிவிடும்; மாறாக, அந்த வார்த்தையை/சொல்லை எப்படி உச்சரிக்கிறோமோ அப்படியே அதை ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்; அதாவது, "Singappoor" என்று டைப் செய்யவேண்டும். "Type" என்ற சொல்லை தமிழில் பதிய விரும்பினால் அதை "Taip" என்றுதான் ஆங்கிலத்தில் பதிய வேண்டும். இதை விட்டு "type" என்று பதிந்தால் அது தமிழில் "டிபே" என்று ஆகிவிடும். 

இதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது, கூகுளின் மெமொரியில் ஒரு வார்த்தைக்கு/சொல்லுக்கு பல்வேறு விதமான உச்சரிப்புகள் உள்ளன; உதாரணமாக, நீங்கள் "type" என்று ஆங்கிலத்தில் பதியும் போது அது "டிபே" என்று வந்தால் அந்த வார்த்தையின் அருகில் உங்கள் "cursor" ரை வைத்து கிளிக்கினால் அதில் "type" என்ற வார்த்தைக்கு டிபே, டைப், டிப்பா என்று பல்வேறு சாய்ஸ் இருக்கும், அதில் உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்து கொள்ளலாம். 

ஆரம்பத்தில் கொஞ்சம் பழக வேண்டும். பிறகு இது வெகு சுலபமாகிவிடும். 

வாங்க, பழகலாம்.

Comments

Basheer Ahamed said…
தமிழ் 99 என்ற மொழியில் டைப் செய்வது பற்றி கொஞ்சம் விளக்கி கூறுங்களேன் . - பஷீர், கொச்சின், 9846042138

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...