Skip to main content

Posts

This free digital greeting generated with Smilebox

BOUND-அருமையான த்ரில்லர்

சில நாட்களுக்கு முன் HBO சானலில் இந்தப் படம் காட்டப்பட்டபோது அவ்வளவாக எதிர்பார்ப்பு ஏதும் இன்று அதை காண முற்பட்டேன். அவ்வளவாக தெரியாத நடிகர்கள், படத்தின் பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. ஆனால், இயக்குனர்(கள்) யார் என்று தெரிந்தவுடன் நான் உற்சாகமாகிவிட்டேன். Matrix என்ற பெயரில் மூன்று பாகங்கள் எடுத்து பெரும் பரபரப்பையும், நல்ல பெயரையும், ஏராளமான பணத்தையும் சம்பாதித்த 'Wachowski சகோதரர்கள்" இயக்கிய முதல் படம் இது. 1996 இல் வெளிவந்த இந்தப் படம் ஒரு neo-noir crime thriller என்று புகழப்படுகிறது. பிற்பாடு பல புதுமைகளை அரங்கேற்றிய Matrix series படங்களை  இயக்கிய இந்தத் திறமையான சகோதரர்கள் முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார்கள் என்றால் அது ஒன்றும் அதிசயமில்லை. 1996 ம் ஆண்டிலேயே lesbian உறவை மிகத் துணிச்சலாக காட்டியுள்ள இந்தப் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது. ஐந்தாண்டு சிறையில் இருந்துவிட்டு வெளிவரும் கார்கி (Gina Gershon) அடுத்தது எங்கே கை வைக்கலாம் என்று நோட்டம் பார்க்க தன்னுடைய ப்ளம்பர் மற்றும் பெயிண்டர் திறமைகளை வைத்துக்கொண்டு ஒரு பண...

உருளைக்கிழங்கு - ஒரு உன்னத உணவு

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும். 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும், கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன. ஒரு மனிதன் தினமும் பாலும், உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட்டுகள் (மாவுப...

மன்மதன் அம்பு - Bull's Eye

ஏற்றுக்கொள்ளும் வேடம் எதுவானாலும் அதை சிரமேற்கொண்டு சிறப்புடன் செய்யும் ஒரு மிகச் சிறந்த நடிகர் கமல் ஹாசன். அவருடைய இன்றைய வெளியீடான மன்மதன் அம்பு அவருடைய அர்பணிப்புக்கு ஒரு உதாரணம். நடிப்பு, பாடல், திரைக்கதை, வசனம் என்று ஏகப்பட்ட பொறுப்புகளை சுமந்தாலும் எல்லாவற்றையும் செவ்வனே செய்திருக்கிறார் நம் உலகநாயகன். கமல்-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் எந்தப் படமும் தோற்றதில்லை. இந்தப் படமும் அதை நிரூபிக்கிறது. எந்த இடத்திலும் தொய்வு விழாமல் கொண்டு செல்லும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை நிச்சயம் பாராட்டவேண்டும். கமலின் நடிப்பைப் பற்றி நாம் எதுவும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் படத்தில் நடிப்பைப் பொறுத்தவரை கமல் மிகவும் மெனக்கெடவில்லை என்றே எனக்குப்படுகிறது.  தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவன் அழகாக சிரிக்கிறார், அளவாக நடிக்கிறார். ரொம்பவும் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்புக்கு ஒரு சபாஷ். அம்புஜாக்ஷியாக வரும் த்ரிஷா மிக அழகாக இருக்கவேண்டும் என்றே ஒரே நோக்கில் ஒரு ஷோகேஸ் பொம்மை மாதிரிதான் வருகிறார். இவர்களைத் தவிர ஏராளமான நடிகர்கள் இந்தப் படத்தில். யாருக்கும்...

சச்சினின் மற்றுமொரு சாதனைச் சரித்திரம்!

   மாஸ்டர் ப்ளாஸ்டர் (Master Blaster) சச்சின் இன்று இன்னுமொரு மகத்தான சாதனை நிகழ்த்தியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை யாருமே செய்யாத சாதனையை சச்சின் இன்று செய்திருக்கிறார். தென் ஆப்ரிக்காவில் சென்சூரியனில் நடைபெற்று வரும் முதல் test போட்டியில் தனது 50 வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். 1990 இல் இங்கிலாந்துக்கு எதிராக முதல் சதம் அடித்து தன் சாதனையை ஆரம்பித்து வைத்த சச்சின், இன்று 20 வருடம் கழித்து சென்சூரியனில் தனது 50 வது சாதனையைச் செய்துள்ளார். வாழ்க சச்சின்! 2G ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகளின் நிகழ்ந்த அவமானம், காசு மட்டுமே சம்பாதிக்க நினைக்கும் நம் கேவலமான அரசியல்வாதிகள் ஆகிய பல்வேறு விஷயங்களால் தலை குனிந்திருக்கும் இந்தியர்கள் பெருமையுடன் தலை நிமிர இதோ ஒரு மகத்தான காரணம்.

நீரா ராடியா மேல் வழக்குத் தொடர கருணாநிதியால் முடியுமா?

2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் சந்தி சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவலை நினைத்து உரலை இடித்த கதையாக இந்த விவகாரம் பற்றி துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ மீது பாய்ந்திருக்கிறார் நம் முதல்வர். தயாநிதி மாறன் தயாளு அம்மையாருக்கு ரூ600 கோடி கொடுத்ததாக நீரா ராடியா பேசியிருக்கும் டேப் இப்போது உலகம் பூராவும் வலம் வருகிறது. இதைப் பற்றி வழக்குத் தொடரவோ, கேள்வி கேட்கவோ கருணாநிதியில் முயன்றால் அது நீரா ராடியாவின் மேல்தானே தவிர, இதைப் போன்ற விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் மீது தேவையில்லாமல் பாயக்கூடாது.  இதைப் பற்றி தயாநிதி மாறன் இன்னும் மறுப்பேதும் சொல்லவில்லையே அதை ஏன் கருணாநிதி கேட்கவில்லை? இதைப் பற்றி தயாளு அம்மையாரிடம் ஏதாவது பேசியிருப்பாரா? காரணகர்த்தாக்களான தயாநிதி மாறன், நீரா ராடியா ஆகியோரைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் பேசாத முதல்வர் தேவையில்லாமல் சோ மீது பாய்கிறார்.  இதைப் போல நடந்ததா என்று சோ ஏன் நிரூபிக்க வேண்டும்? இது போல நடக்கவில்லை என்று தயாளு அம்மாள் சார்பில் கருணாநிதி அல்லவா நிரூபிக்க வேண்டும். நல்ல காமெடி பெரியவரே! (கீழே உள்ள ச...

உலகின் சிறந்த "பின்" அழகிகள் - World's Best Bum-2010

உலக அழகிகள் என்று முதலில் பெண்களைத் தேர்வு செய்து பட்டம் சூட்டினார்கள், பின்பு இது முன்னேறி, சிறந்த கூந்தல் அழகி, சிறந்த பல் அழகி, சிறந்த கண் அழகி என்றெல்லாம் பல்வேறு விதமாக, படிப்படியாக, விதவிதமான அழகிகளை தேர்வு செய்து பட்டம் சூட்டி விட்டு, சமீபத்தில் உலகின் சிறந்த "பின்" அழகி யார் என்று போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றுள்ள அழகிகளின் தரப் பட்டியலை  "World's Best Bum 2010" என்ற பெயரில் லண்டனிலிருந்து வரும் தி சன் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த அழகிகளின் "பின்" அழகுப் படங்கள் சரிவரக் கிடைக்காத நிலையிலும் சற்றும் மனம் தளராமல் வலைப் பக்கங்களை மேய்ந்து அந்த அழகிகளின் புகைப் படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தப் போட்டிக்கு அவர்கள் வைத்த பெயர்தான் சற்று நெருடலாக இருக்கிறது, "the Holy Grail of Hindquarters," என்பதில் Hindquarters என்றால் பின்புறம் என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால், Holy Grail என்பது ஒரு புனிதமான கிறிஸ்துவக் குறியீடு: கிறிஸ்துவ மத நம்பிக்கையின்படி ஏசு கிறிஸ்து அவருடைய "கடைசி விருந்து" (Last Supper) நடந்த சமயம் ...