Skip to main content

உலகின் சிறந்த "பின்" அழகிகள் - World's Best Bum-2010

உலக அழகிகள் என்று முதலில் பெண்களைத் தேர்வு செய்து பட்டம் சூட்டினார்கள், பின்பு இது முன்னேறி, சிறந்த கூந்தல் அழகி, சிறந்த பல் அழகி, சிறந்த கண் அழகி என்றெல்லாம் பல்வேறு விதமாக, படிப்படியாக, விதவிதமான அழகிகளை தேர்வு செய்து பட்டம் சூட்டி விட்டு, சமீபத்தில் உலகின் சிறந்த "பின்" அழகி யார் என்று போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றுள்ள அழகிகளின் தரப் பட்டியலை  "World's Best Bum 2010" என்ற பெயரில் லண்டனிலிருந்து வரும் தி சன் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.


இந்த அழகிகளின் "பின்" அழகுப் படங்கள் சரிவரக் கிடைக்காத நிலையிலும் சற்றும் மனம் தளராமல் வலைப் பக்கங்களை மேய்ந்து அந்த அழகிகளின் புகைப் படங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

இந்தப் போட்டிக்கு அவர்கள் வைத்த பெயர்தான் சற்று நெருடலாக இருக்கிறது, "the Holy Grail of Hindquarters," என்பதில் Hindquarters என்றால் பின்புறம் என்று எல்லோருக்கும் தெரியும்,

ஆனால், Holy Grail என்பது ஒரு புனிதமான கிறிஸ்துவக் குறியீடு: கிறிஸ்துவ மத நம்பிக்கையின்படி ஏசு கிறிஸ்து அவருடைய "கடைசி விருந்து" (Last Supper) நடந்த சமயம் அவர் தண்ணீர் பருகிய ஒரு சிறிய பாத்திரம். இந்த ஹோலி க்ரைலுக்கு எக்கச்சக்கமான அதிசய சக்தி உண்டு என்பது கிறிஸ்துவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்பேற்பட்ட ஒரு பெயரை இதைப் போன்ற ஒரு அழகிப் போட்டிக்கு வைக்க வேண்டுமா?

 சரி, சரி இந்த மாதிரி புனித விஷயங்களை விட்டுவிட்டு நம் அழகிகளுக்கு வருவோம். இதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள எல்லா ஹாலிவுட் அழகிகளுமே 40 வயதைத் தாண்டியவர்கள்தான். முன் அழகோ, பின் அழகோ வயது ஒரு தடையில்லை எனவே உங்கள் பார்வைக்கு அழகிகளின் படங்கள்.

முதல் இடத்தை பிடித்த அழகி கிம் கர்டஷியன் (Kim Kardashian)
இரண்டாவது அழகி ஜென்னிபர் லோபெஸ் (Jennifer Lopen)

மூன்றாவது அழகி-பியான்ஸ் நோயல்ஸ் (Beyonce Knowels)

நான்காவது இடம்-ஜெசிக்கா பியல் (Jessica Biel)

ஐந்தாவது இடம் லேடி ககா (Lady Gaga)
இந்த உருப்படியான பதிவை தமிழ் கூறும் நல்லுலகுக்கு (நன்றி: எழுத்தாளர் அமரர் சுஜாதா) காணிக்கையாக தருவதற்காக நான் பெரும் சிரத்தையுடன் பதிந்து கொண்டிருந்தபோது, என் முதுகில் சுளீரென ஒரு அடி விழுந்தது, பார்த்தால் என் அன்பு மனைவி!! "வைகுண்ட ஏகாதசியும் அதுவுமா இது என்ன கண்றாவி வேலை?" என்று கோபித்துக் கொண்டதால், மக்களே, இந்த ரேங்கிங் சரியா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...