Skip to main content

Posts

மாஸ்டரின் 48வது செஞ்சுரி

  சிகரங்கள் தொட்டுவிடும் தூரம்தான் என்று விளையாடி வரும் "மாஸ்டர் ப்ளாஸ்டர்" சச்சினின் நேற்றைய சாதனை 48வது செஞ்சுரி. இவர் இதுவரை அடித்த செஞ்சுரிகள் 94 (ODI யில் அடித்தது 46, டெஸ்ட் போட்டிகளில் அடித்தது 48!) கூடிய விரைவில் செஞ்சுரியில் செஞ்சுரி அடித்துவிடுவார் என நினைகிறேன். இதை சச்சின் செய்து முடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன். 2008ம் ஆண்டின் முடிவில் சச்சின் 41 செஞ்சுரிகள் (டெஸ்ட் போட்டிகளில்) அடித்திருக்கும் போது  ஆஸ்திரேலியாவின் குரங்கு ரிக்கி பாண்டிங் 37 செஞ்சுரிகள் அடித்திருந்தார். கிட்டத்தட்ட எல்லா ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளிலும் விரைவில் பாண்டிங் சச்சினின் சாதனையை முறியடித்துவிடுவார் என செய்திகள் வந்தன. போதாக்குறைக்கு, அப்போது பாண்டிங்கின் டெஸ்ட் சராசரி 57.2 என்பது சச்சினின் சராசரியான 54.3 விட அதிகமாக இருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் சச்சின் 48 செஞ்சுரிகள் அடித்துவிட, குரங்கு பாண்டிங் இன்னும் 39 இல்தான் இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் சச்சின் 1219 ரன்கள் அடித்து (12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே) சராசரியை 55.9 க்கு கொண்டு சென்றுவிட்டார்.பாண்டிங் சராசரி இப்போது 54.7...

(Deja Vu) டேஜா வூ

டேஜா வூ என்ற ஆங்கில சொல்லுக்கு அர்த்தம் ஒரு நிகழ்வு நம்மைச் சுற்றியோ, அல்லது நமக்கே நடக்கும்போதோ நம்மில் பலருக்கு இந்த நிகழ்வு/அனுபவம் ஏற்கனவே நிகழந்த/அனுபவித்த ஒன்று போல இருக்கிறதே என்றுதோன்றும் ஒரு விஷயம். என் நண்பர் நாகுவுக்கு இந்த டேஜா வூ சற்று வேறுமாதிரி நிகழ்கிறது. அவருக்கு சமீப காலமாக சில ஆங்கிலப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த படத்தின் கதை அப்படியே எழுத்தாளர் சுஜாதாவின் கதையை சுட்ட மாதிரி இருக்கிறதே என்ற உணர்வுதான் அது. சில நாட்களுக்கு முன், Shutter Island என்ற ஆங்கில படத்தைப் பாத்துவிட்டு இதன் கதை அப்படியே சுஜாதா எழுதி 1971 இல் வெளிவந்த "ஒரு அராபிய இரவு" என்ற சிறுகதை போலவே உள்ளது என்றார். பிறகு, ஸ்டார் மூவீஸ் சானலில் The Day The Earth Stood Still என்ற படத்தைப் பார்த்து விட்டு, இதன் கதை சுஜாதா எழுதி (வருடம் ஞாபகம் இல்லை) வெளிவந்த "திசை கண்டேன், வான் கண்டேன்" என்ற கதையைப் போலவே உள்ளது என்றார். இதைப் போன்ற டேஜா வூ வரக் காரணம், நண்பர் நாகுவுக்கு (என்னைப் போலவே) அறிவுஜீவி எழுத்தாளர் சுஜாதா மேலிருக்கும் ஒரு அபரிமிதமான அபிமானம், மரியாதை. Shutter Island ...

தமிழில் பதிய....

என் நண்பர் சுவாமி என்கிற சிவா என்னுடைய blog எழுதுவது பற்றிய பதிவைப் படித்து விட்டு, நிறைய பேர் தமிழ் மொழியில் பதிவு செய்ய கஷ்டப்படுகிறார்கள் அது எப்படி என்று சொல்லிவிடுங்கள் எனக் கேட்டிருந்தார். blog பதிவுக்கு முதல் தேவை ஒரு ஜி-மெயில் ஐடி, பிறகு ஒவ்வொரு முறை நீங்கள் பதிய நினைக்கும் போதும் நியூ போஸ்ட் என்பதைக் கிளிக்கினால் ஒரு விண்டோ திறக்கும். அதில் நீங்கள் தமிழில்  பதிவு செய்ய வேண்டுமெனில் அந்த விண்டோவின் தலையில் இருக்கும் பல்வேறு பட்டன்களில் "அ" என்ற எழுத்து இருக்கும். தமிழில் டைப் செய்யவேண்டிய வார்த்தை 'vanakkam" என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்பி விட்டு, அதை மௌஸ் மூலம் செலக்ட் செய்துவிட்டு பின் அந்த "அ" பட்டனை அழுத்தினால் அது தமிழ் வணக்கமாக மாறி விடும். இது முதன்முதலில் நீங்கள் தமிழில் டைப்பும் போது மட்டும். இதன் பிறகு எந்த வார்த்தையை வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் டைப்பி விட்டு பிறகு CTRL G அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடும்.  இதில் சில நடைமுறை கஷ்டங்கள் உள்ளன. உதாரணமாக நீங்கள் சிங்கப்பூர் என தமிழில் டைப் செய்ய...

சச்சின் புத்தகத்தில் ரத்தம் இல்லை:

  "டெண்டுல்கர் ஓபஸ்"  புத்தகத்தில், எனது ரத்தம் இடம் பெற்றிருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை,'' என, சச்சின் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் "சாதனை மன்னன்' இந்தியாவின் சச்சின். டெஸ்ட் (13, 539) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17, 598) அதிக ரன் குவித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரேகான் மீடியா நிறுவனம் வெளியிட உள்ளது."டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் வரும் 2011ல் உலககோப்பை போட்டி (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளது. 37 லட்சம்: "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் மொத்தம் 852 பக்கங்கள் கொண்டது. 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது. இது தவிர, 1. 50 லட்சம், 1 லட்சம் ரூபாயிலும், 10 ஆயிரம், 12 ஆயிரம் ரூபாயிலும் இப்புத்தகம் விற்பனை செய்யப்பட உள்ளது. சச்சின் மறுப்பு: இப்புத்தகத்தின் கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருக்கும் என கிரேகான் மீடியா நிறுவனத்...

சச்சினின் "ரத்த" சுயசரிதம்

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது "டெண்டுல்கர் ஓபஸ்' (Tendulkar Opus) என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார்.  கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் (2011) வெளியிடப்பட உள்ளது.  தனிச்சிறப்பு: கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37Kg  எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன் பதிவும் முடிந்து விட்டது. ரத்தத்தின் ரத்தங்கள்: சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக க...

Blog பதிவு அவ்வளவு கடினமான வேலை அல்ல

சந்தடி சாக்கில் அப்படியே என் படத்தையும் போட்டு விடலாம். என் நண்பர் ரவி, கொல்கத்தாவிலிருந்து நேற்று என்னுடன் பேசும் போது, என் பதிவுகளைப் பற்றி சிலாகித்துவிட்டு, "அது எப்படி காலை 8 மணிக்கு உன்னால் அவ்வளவு நீளமான தமிழ் விமரிசனங்களை எல்லாம் எழுத முடிகிறது?" என்று ஆர்வமாகக் கேட்டார். நண்பரே, blog பதிவு எனக்கு ஒரு creative வடிகால். நாள் முழுக்க அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் போது, தப்பித் தவறி கூட வீட்டிலிருந்து கொண்டு எந்த அலுவலக வேலைகளையும் நான் செய்வதில்லை. அதே போல, என்னுடைய நிறைய பதிவுகளை முழுக்க, முழுக்க நானே தயாரிப்பதில்லை (தட்டச்சுவதில்லை). எப்போதெல்லாம் சுவாரசியமான பதிவுகளைப் பார்க்கிறேனோ, அப்போதே அதை draft ஆக சேமித்து விடுகிறேன். பிறகு நேரம் கிடைக்கும் போது, அதை தூசு தட்டி, கொஞ்சம் நகாசு வேலைகளையும் (என் பங்குக்கு) சேர்த்து அதை அப்படியே பதிந்து விடுகிறேன். அந்தப் பதிவு நேரம் காலை 8 மணியாக இருக்கலாம், அதற்காக நான் 8 மணிக்குத்தான் அதை நான் தயார் செய்கிறேன் என்று அர்த்தமல்ல. பெரும்பாலான சுவாரசியமான தகவல்கள் ஏராளமான வலைத் தளங்களில் கொட்டிக் கிடக்கின...

அல்லலுறும் ஆண்களுக்கு Golf மன்னன் Tiger Woods அறிவுரை:

Tiger Woods-பொன் மொழிகள்  அனுப்பி வைத்து உதவிக்கரம் நீட்டிய இனிய நண்பர் நாகுவுக்கு நெஞ்சார்ந்த நன்றி.