Skip to main content

Posts

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

2013-ல் உலகம் தாக்கப்படுமா?

2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற பீதியே இன்னும் குறையாதபோது, இப்போது, புதிதாக 2013-ல் உலகத்தில் உள்ள எல்லா மின்னணு சாதனங்களும் செயலிழக்கும் என செய்தி வெளியாகி உள்ளது. 1859-ல் சூரியனின் மேற்பகுதியில் உருவான solar storm எனப்படும் வெப்பத் தாக்குதலால் உலகமெங்கும் பல்வேறு பகுதிகளில் தொலைத் தொடர்பு சாதனங்கள் (telegraphic equipments) வெடித்து சிதறி தீ விபத்துகள் ஏற்பட காரணமாக இருந்தன. ஆனால், இடைப்பட்ட இந்த 150 ஆண்டுகளில் உலகம் விஞ்ஞான ரீதியில் வெகுவாக முன்னேறி விட்டது. இப்போது, உலகின் எல்லா பகுதிகளிலும் மின்னணு (electronic) சாதனங்கள் இல்லாமல் எதுவம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், 2013 பூமியைத் தாக்கப் போகும் solar storm 1859-ல் இருந்த அளவில் தாக்கினாலே உலகம் செயலிழந்து போகும் வாய்ப்பு இருப்பதாக NASA ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு சாதனங்கள் மட்டுமல்லாது, விமானங்கள், தொலைகாட்சி சாதனங்கள், வங்கிகள், வியாபார சந்தைகள் ( stock markets) உட்பட பல்வேறுவிதமான பாதிப்புகள் மக்களை தாக்கும். உலகின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். தீ...

சின்ன வீடா வரட்டுமா?

சின்ன வீடு என்றாலே ஜொள்ளு விடாத ஆண்கள் மிகக் குறைவே. அப்படி இருந்தால் ஒன்று அவர்கள் 16 வயதுக்குக் கீழேயோ அல்லது 60 வயதுக்கு மேலேயோதான் இருப்பார்கள். இது அநியாயம், அக்கிரமம் என்றெல்லாம் பெண் வர்க்கம் குரல் கொடுத்து வந்தாலும், நிறைய பெண்கள் இதுவும் ஒரு நல்ல வசதியான வாழ்க்கைதான் என்கிறார்களாம்; ஓகே, இங்கு இல்லை, அமெரிக்காவில். சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் ஒரு ஆணின் வாழ்க்கையில் ஒரு பெண் "இன்னொரு பெண்ணாக" இருப்பதின் வசதிகளை பட்டியலிட்டுள்ளது ஒரு அமெரிக்க இணைய தளம் 1. ஒரு ஆணின் மற்றொரு பெண்ணாக இருப்பதால் நீங்கள் அவனுக்கு பிடித்த வெங்காய சாம்பார் செய்ய வேண்டிய அவசியமில்லை. கஷ்டப்பட்டு செய்துவிட்டு, "என்ன இருந்தாலும் எங்க அம்மா வைக்கற சாம்பார் மாதிரி வராது," என்ற வார்த்தைகளை கேட்க வேண்டியது இல்லை. 2. அவனுடைய சட்டைக்கு இஸ்திரி போடுவது, பேங்க் வேலைகளைப் பார்ப்பது, அவனுடைய மாமாவுக்கு வெந்நீர் வைப்பது போன்ற அடிமைத்தனமான வேலைகளைச் செய்ய வேண்டியதில்லை. 3. . அவனுக்கு பயந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமான உடலைக் கவ்விக் கொள்ளும் உடைகளையோ, செக்ஸியான அலங்காரம் செய்து கொள்வதையோ...

முத்தே, முத்தே, முத்தமா

 (மேலே இருப்பது உலகப் புகழ் பெற்ற சிற்பி Rodin செதுக்கிய "KISS," சிற்பம்)  பொதுவாக மு‌த்த‌ம் கொடு‌ப்பது எ‌ன்பது ஏதோ பேச‌க் கூடாத வா‌ர்‌த்தை எ‌ன்று இரு‌ந்த கால‌ம் போ‌ய் ‌வி‌ட்டது. த‌‌ற்போது தா‌ம்ப‌த்ய‌த்தை‌ப் ப‌ற்‌றி‌‌க் கூட வெ‌ளி‌ப்படையாக‌ப் பேசு‌ம் அள‌வி‌ற்கு வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌த்து ‌வி‌ட்டன. மு‌த்த‌ம் எ‌ன்பது பொதுவாக அ‌ன்‌பி‌ன் அடையாளமாக‌க் கருத‌ப்படு‌கிறது. மு‌த்த‌ம் எ‌ன்பதை பொதுவாக அ‌திகமாக‌ப் பெறுவது குழ‌ந்தைக‌ள்தா‌ன். குழ‌ந்தைகளு‌க்கு பெ‌ற்றவ‌ர்க‌ள் முத‌ல், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள் என பலரு‌ம் மு‌த்த‌த்தை வழ‌ங்குவா‌ர்க‌ள். இவை அ‌ன்‌பி‌ன் அடையாள‌ம். அடு‌த்தபடியான காதல‌ர்க‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம் ம‌ற்று‌ம் த‌ம்ப‌திக‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம். மு‌த்த‌த்‌தி‌ல் எ‌த்தனையோ வகை உ‌ள்ளது. கை, நெ‌ற்ற, க‌ண்ண‌ம், தலை, உதடு என உட‌லி‌‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் மு‌த்த‌மிட‌ப்படு‌கிறது. ஒ‌வ்வொருவரு‌ம் த‌ங்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் அ‌ன்யோ‌ன்ய‌த்‌தி‌‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம், மு‌த்த‌மிடு‌ம் சூ‌ழ்‌நிலை‌‌யி‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம் மு‌த்த...

20:20 உலகக் கோப்பை - தொடரும் தோல்விகள்

ஒரு வழியாக இலங்கையிடம் அடிவாங்கி வெளியே வந்துவிட்டோம். தோனி என்னதான் மறுத்தாலும் ஒவ்வொரு முறையும், IPL T20 யில் மாங்கு மாங்கு என விளையாடிவிட்டு, ஓய்ந்து போனபின்னரே நாம் உலகக் கோப்பை மாட்சுகளுக்கு விளையாட செல்கிறோம். இவ்வாறு தொடர்ந்து விளையாடுவதால் ஏற்படும் fatigue factor ஒரு பெரிய தலைவலி என்பது தெரிந்தும் அதே தவறை தொடர்ந்து செய்து வருகிறோம். இங்கு இந்தியாவில் flat pitchகளில் விளையாடுவது வேறு, மேற்கு இந்திய தீவுகளில் இருக்கும் pitchகளில் விளையாடுவது என்பது வேறு. இதை நம் அணியினர் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொண்டும் அலட்சியமாக இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. பதில் தெரியாத சில கேள்விகள்/சந்தேகங்கள்: முரளி விஜய் opener ஆக இறங்கியது தவறு.  20:20 மாட்சுகளில் முதல் 5 ஓவர்களில் அடிக்கும் ரன்கள் மிக முக்கியமானவை எனத் தெரிந்த பின்பும் ஏன் முரளி விஜய் தொடந்து முதலில் வர வேண்டும்?  யுவராஜ் சிங் இனிமேலும் தேவையா? டாஸில் வென்ற பிறகும் தவறான முடிவு எடுக்கும் தோனியின் எண்ணம் மாறவே மாறாதா?  பாட்டிங்கில் நல்ல form-இல் இருந்தும் ஏன் உத்தப்பா போன்றவர்கள் தேர்வு செய்யப...

ஹிட்லர் விஷம் தின்றதால்தான் மடிந்தார்

இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஹிட்லரின் மறைவிடம் (bunker) சுற்றி வளைக்கப்பட்டபோது அவரும், அவருடைய மனைவியும் (Eva Braun) துப்பாகியால் சுட்டுக்  கொண்டு வீர மரணம் அடைந்தார்கள் என்றுதான் நாம் எல்லோருமே சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறோம். இதையேதான் ஹாலிவுட் திரைப்படங்களும் இவ்வளவு வருடங்களாக் காட்டி வந்தன. ஹிட்லரைப் பிடிக்க நேச நாட்டு படை (Allied Forces) வரும் முன்னரே ஹிட்லரின் மெய்க் காவலர்கள் அவருடைய உடம்பையும், அவருடைய மனைவியின் உடம்பையும் எரித்து விட்டார்கள். அமெரிக்க மற்றும் ஆங்கிலேயர்கள் அங்கு போய்ச் சேர்ந்தபோது, ஹிட்லரின் எரிந்து போன மிச்சம்தான் கிடைத்தது. ரஷ்யப் படையினர் அந்த எரிந்து போன மிச்சங்களைக் கைப்பற்றி ஆராய்ந்தபோது, மண்டையோட்டில் ஒரு தோட்டா (bullet) பாய்ந்ததின் அடையாளம் தெளிவாக இருந்ததால் அதுதான் ஹிட்லரின் மண்டையோடு என தீர்மானித்து அதை மாஸ்கோவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திலும் (museum) வைத்து விட்டார்கள். ஆனால் இவ்வளவு வருடங்கள் கழித்து இப்போது ஒரு ரஷ்ய உளவுத் துறை (FSB) அதிகாரி ஒருவர் (Lieutenant-General Vasily Khristoforov), ஹிட்லர் சயனைட் உண்டுதான் இறந...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...