Skip to main content

எங்க ஊரு வாசம்: கள்ள வலியைப் போக்கும் விளக்கெண்ணெய்!!

-பாரத தேவி 



அந்தக் காலத்துச் சிறுவர், சிறுமிகளுக்கு நாலு வயசு, மூணு வயசு ஆகும்வரை உடம்பில் துணி என்பது இருக்காது. பள்ளிக்கூடம், படிப்பு என்பதும் கிடையாது. அவர்கள் பாட்டுக்கு தெருவிலும் மந்தையிலும் புழுதியேறிய உடம்போடு எப்போதும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். பொங்கல், தீபாவளி வந்தால் மட்டுமே அவர்களின் தாய், தங்கள் கிழிந்த சேலைகளை இன்னும் அதிகமாய்க் கிழித்துப் பெண் பிள்ளைகளுக்கு இடுப்பில் கட்டி அம்மணத்தை மறைப்பார்கள். ஆண் பிள்ளைகளுக்கு அதே கிழிந்த சேலை கோவணமாகப் பயன்படும்.

வீட்டுப் பெரியவர்கள் தாங்களே திரித்த புளிச்ச நாற்றின் கயிற்றினால் கூரையை வேய்வார்கள். இவ்வளவு நாளும் வேலை செய்து லாடம் தேய்ந்த காளைகளை கயிறு கட்டிச் சாய்த்து அதன் காலில் புது லாடம் அடிப்பார்கள். அப்போதுதானே மாட்டு வண்டிப் பந்தயத்தில் ஓட முடியும்! அதோடு தொலைதூர ஊர்களில் வயதாகி நடக்க முடியாமலும், கண் பார்வை மங்கிப் பார்க்க முடியாமலும் இருக்கும் தங்களின் ‘அம்மி, சீயான்' அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக வண்டிகட்டிக்கொண்டு போனார்கள்.

பாவம் அவர்கள் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடியாமல் நாக்கு செத்துக்கிடப்பார்கள். பொங்கல் திருநாளில் மூன்று நாளும், அதுவும் மூன்று வேளைக்குப் பருப்பு வெஞ்சனத்தோடு நெல்லுச் சோறு சாப்பிட்டு அதுவும் செழிக்கக் கொள்ளலாம். சொந்த பந்தங்களோடு மனம் விட்டுப் பேசி பழகலாம். பலகாரம், பண்டம், கறியோடு சோறு சாப்பிடலாம். இப்படி இன்னும் எத்தனையோ ஆசைகள் அவர்களுக்கு நிறைவேறலாம். அதனால்தான் அவர்களை வருசத்துக்கு ஒரு முறை கூட்டிக்கொண்டு வருவார்கள்.

அதோடு ஊரின் ஒதுக்குப்புறமாக ‘செக்கு' நிறுத்தியிருக்கும் சொக்கலிங்கத்துக்கு பொங்கல் நாள் நெருங்க, நெருங்க செக்கு ஆட்டி முடியாது. மூடை, மூடையாக எள்ளு, நிலக்கடலைப் பருப்பு, கருப்பட்டி வட்டுகளோடு வந்து கிடக்கும். கருப்பட்டியை இந்தக் கடலை, எள்ளோடு சேர்த்து ஆட்ட வேண்டும். அப்போதுதான் எண்ணெயும் கமறாது, ருசியாகவும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எண்ணெய் ஆட்டிக்கொடுக்க அவரால் முடியாது.

அதனால் இத்தனை படி கடலைக்கு இத்தனை படி எண்ணெய் என்று கணக்கு வைத்து எல்லோருடைய கடலையையும் ஒன்றாகப் போட்டு ஆட்டி எண்ணெயை மட்டும் ஆளாளுக்கு அளந்து கொடுத்துவிடுவார். இதில் ஊர்ப் பெண்களுக்கு சம்மதம்தான். அது மட்டுமில்லாமல் எண்ணெய் ஆட்டி பிழிந்த எள்ளுப் புண்ணாக்கு தின்பதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். அந்தப் புண்ணாக்கை பகிர்வதோடு ஆளாளுக்கு அடுக்குப் பானையில் போட்டு பத்திரப்படுத்திவிடுவார்கள். வீட்டுக்கு வரும் முக்கிய விருந்தாளிகளுக்குக்கூட இது ஒரு அருமையான பண்டம்தான்.

இதில் விளக்கெண்ணையின் பங்கும் வீட்டுக்கு முக்கியமானது. தலைக்குத் தேய்ப்பதற்கு எல்லோரும் விளக்கெண்ணெய்தான் பயன்படுத்துவார்கள். அதோடு கண்ணில் தூசி விழுந்துவிட்டால் ‘அமிர்த்த பாலு'டன் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் சேர்த்துக் கண்ணில் விட்டால் தூசி ஒதுங்கிவிடும். வெயில் காலத்தில் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்குக் கையில் இந்த எண்ணெயைக் கொஞ்சம் விட்டு கொப்பூளிலும் காலின் உள் பாதத்திலும் வைத்துத் தேய்த்து விட்டால் சூடு எங்கே எங்கே என்று பறந்து ஓடும்.

வயிற்றுப் பிள்ளைக்காரிகள் ஏழு மாதத்திலிருந்து அடிவயிற்றில் இந்த எண்ணெயைச் சிறிது தடவி இளம் வெந்நீரில் குளித்தால் பிள்ளை பெறத் தோதாக உடம்பு இளக்கம் கொடுக்கும். சிலருக்கு நிறைமாதம் வருமுன்பே பிரசவ வலிபோல் வலி வந்துவிடும். அதனால் உள்ளங்கையில் கொஞ்சம் விளக்கெண்ணெய் ஊற்றி நக்கிச் சாப்பிட்டால் கள்ள வலியென்றால் அப்படியே நின்றுவிடும். இப்படி விளக்கெண்ணெய் உபயோகம் ரொம்ப இருந்தது.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...