Skip to main content

சென்னை புத்தகக் கண்காட்சி 2014-ம் தலைவர் சுஜாதா பரிந்துரைத்த கொக்கோகம் புத்தகமும் :


கடந்த 27 வருடங்களாக வருடம் தவறாமல் இங்கு செல்கிறேன். கடந்த வருடம் குறிப்பட்டது போல புத்தகம் வாங்குவது இப்போது மிக எளிதாகி விட்டது. எல்லோருமே ஆன்-லைன் வசதிக்கு வந்து விட்டதால் நமக்கு அலைச்சல் /பெட்ரோல் செலவு மிச்சம். ஆன்-லைன் என்றதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அமேசான்/ப்லிப்கார்ட் போன்ற ஆன்-லைன் நிறுவனங்கள் 48-60 மணிக்குள் புத்தகங்களை வீட்டில் சேர்த்துவிடுகின்றன. "Pay on delivery " என்ற வசதி வேறு. 
 
சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த டிஸ்கவரி புக் பாலஸில் சில புத்தகங்களை ஆன்-லைனில் ஆர்டர் செய்து நெட்-பேங்கிங் மூலம் பணமும் செலுத்தியாகிவிட்டது. இது நடந்தது ஜனவரி 2-ம் தேதியன்று. இன்று தேதி 17. 15 நாட்களுக்கு பிறகும் டெலிவரி செய்யவில்லை. புத்தக் கண்காட்சியில் இவர்களது ஸ்டாலை பார்த்தவுடன் உள்ளே நுழைந்து சண்டை போடலாம் என்று நினைத்தேன். பிறகு, வேண்டாம் பொது இடத்தில எதற்கு என்று விட்டுவிட்டேன்.
முதல் சுற்றில் வாங்கிய புத்தகங்கள்:
  1. வெக்கை - பூமணி
  2. 18 வது அட்சக் கோடு -அசோகமித்திரன்
  3. சீரோ டிகிரி- சாரு நிவேதிதா
  4. பிகாசோவின் கோடுகள்-எஸ்.ராமகிருஷ்ணன்
  5. அயல் சினிமா-எஸ்.ராமகிருஷ்ணன்
  6. நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
  7. க்ரியா - தமிழ் அகராதி
  8. கொக்கோகம் - அதிவீரராம பாண்டியன்
மேற்குறிப்பிட்ட நூல்களில், பூமணி, அசோகமித்திரன், ஜி.நாகராஜன் போன்றோரின் குறிப்பிட்ட படைப்புகள் தலைவர் சுஜாதாவால் பரிந்துரைக்கப்பட்டவை. 

கொக்கோகம் நூலைப் பற்றி சுஜாதா பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். சரி அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம் என வாங்கிவிட்டேன். 


 
 
 
இரண்டாவது சுற்று, வரும் சனியன்று. 
 
புத்தக விமர்சனங்களை அதி விரைவில் எதிர்பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...