Skip to main content

இறையாண்மையே... உன் விலை என்ன? - from tamil.thehindu.com

அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசியப் பாதுகாப்பு முகமையின் (என்.எஸ்.ஏ.) உளவு வேலை தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளியே வரும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிரவைக்கின்றன. எதிரி நாடுகள், அச்சுறுத்தல் நாடுகள், நட்பு நாடுகள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல், பெரும்பான்மை நாடுகள் அமெரிக்காவால் உளவு பார்க்கப்பட்டி ருக்கின்றன. இந்த உளவு வேலைக்குப் பெரிய ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தியிருப்பது... தகவல் தொழில்நுட்பம் - முக்கியமாக இணையம்.

இந்திய ரகசியங்கள் மோசமாக வேட்டையாடப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒரு மாதத்தில் மட்டும் 1350 கோடி தகவல்கள் திருடப்பட்டி ருக்கின்றன எனும்போது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள், ராணுவ வியூகங்கள், ஆயுதத் தயாரிப்புத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பத் துறைப் பணிகள், தொழில்துறை இலக்குகளில் தொடங்கி இந்நாட்டின் ரகசியங்கள் என்று எதுவும் மிச்சம் இருக்காது என்றே தோன்றுகிறது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் உள்ள நியூயார்க்கிலும் இருக்கும் இந்தியத் தூதரக அலுவலகங்களிலும் உளவுக்கருவிகளைக் கொண்டு தகவல்கள் உறிஞ்சப்பட்டிருப்பது இந்தச் சந்தேகத்தை நியாயப்படுத்துகிறது. எவ்வளவு பெரிய மோசடி? எப்படி முடிகிறது நம்முடைய ஆட்சியாளர்களால் வாய் மூடிப் பார்த்திருக்க?

பிரேசிலும் அமெரிக்காவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் அதிபர் தில்மா ரூசுஃப்  (Dilma Rousseff) கொந்தளித்திருக்கிறார். "நாகரிகமான உலகில் நாடுகள் இடையேயான உறவு கண்ணியமாக இருக்க வேண்டும். இது அநாகரிகம்" என்று சாடியுள்ள அவர், அமெரிக்கா மீது சுமத்தியிருக்கும் ஒரு குற்றச்சாட்டு நாம் கவனிக்கத் தக்கது. "அமெரிக்கா, ‘பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக உளவு பார்க்கிறோம்’ என்று சொல்கிறது. உண்மையில் தன்னுடைய நாட்டின் பெருநிறுவனங்களின் லாபங்களுக்காக, அவர்களுடைய சந்தைக்காக, அவர்களுடைய தேவைக்கேற்ற தகவல்களை வழங்குவதற்காகவே அமெரிக்கா உளவு பார்க்கிறது" என்று சொல்லியிருக்கிறார் தில்மா ரூசுஃப். மேலும், பிரேசில் மக்களுக்கான குடிமை உரிமைகளைப் பாதுகாப்பதில் தன்னுடைய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக, மெக்ஸிகோவுடன் இணைந்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதுடன், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுயேச்சையான இணையச் சேவையைத் தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறும் பிரேசில் விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

மன்மோகன் சிங்கின் மௌனத்துடன் தில்மா ரூசுஃபின் ஆக்ரோஷத்தை ஒப்பிட்டுப்பாருங்கள்... நம்முடைய அரசியல் சட்டத்தின் முகவுரை, "இறையாண்மையுள்ள சமத்துவ மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு" என்று இந்தியாவைக் குறிப்பிடுகிறது. இந்த வார்த்தைகள் யாவும் அவற்றின் அர்த்தத்தை இழந்துகொண்டிருக்கின்றன நம்முடைய ஆட்சியாளர்களால்!

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...