Skip to main content
SHIP OF THESEUS - தீசஸின் கப்பல் - திரைப்பட விமர்சனம் 


ஆங்கில இலக்கியத்தில் Ship of Theseus என்ற சொல்லுக்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த சொல்லின் விளக்கத்தை இவ்வாறாக எடுத்துக் கொள்ளலாம்; ஒரு பழுதடைந்த கப்பலின் அத்தனை பாகங்களையும் மாற்றி விட்டால், அந்தக் கப்பல் பழைய கப்பலாகவே இருக்குமா?? அதன் தன்மை மாறாதா?? இதை ஆங்கில இலக்கியத்தில் "Theseus Paradox" (தீசஸின் முரண்பாடு) என்றும் கூறுவார்கள். 

இந்தப் படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள்; ஆலியா கமல் என்ற கண் பார்வை பழுதடைந்த ஒரு பெண் photographer. அறுவை சிகிச்சை செய்து கொண்டு கண் பார்வை சரியான பின் தன்னால் எடுக்கபடும் புகைப்படங்கள் தரமாக இல்லை என நினைக்கும் ஒரு கதாபாத்திரம். மைத்ரேயா என்ற ஒரு புத்திசாலித்தனமான மனிதன். பொது மக்களுக்கு நல்ல பொருள்/மருந்து  கிடைக்க வேண்டுமென மிருகங்களை ஆராய்ச்சி கூடங்களில் வதை செய்வதை எதிர்க்கும் ஒரு கதாபாத்திரம். ஒரு மனிதன் வாழ ஓர் உயிரை வருத்தலாகாது என்பது மைத்ரேயாவின் வாதம்.  பங்கு வர்த்தக தரகராக, பணம் சம்பாதிப்பது ஒன்றிலேயே குறிக்கோளாக இருக்கும் நவின். 

சில நாட்களுக்கு முன், ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஆமிர் கான், மற்றும் அவருடைய மனைவி கிரண் ராவ் இருவரும் தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி எடுத்துள்ளதாக செய்தி வந்தது, இந்த படம் கிரண் ராவ் தயாரித்தது. உறுப்பு தானத்தை பற்றிய எண்ணங்களை வித்தியாசமான பார்வையில் காட்டுகிறது.

ரசிகர்கள் பக்குவப்படவில்லை அதனால் என்படம் ஓடவில்லை என   ஒப்பாரி வைக்கும் படைப்பாளிகளைக் கண்டிருக்கிறோம்!! ஆனால், எத்தனை படைப்பாளிகள் வியாபாரத்தைப் பொருட்படுத்தாத உரிய கலை அம்சத்தைக் கொண்ட படங்களை இயக்கும் தைரியம் கொண்டிருக்கிறார்கள்??  

இங்கே ஒரு இயக்குனர்  “ஆனந்த் காந்தி” இன்றைய தலைமுறையினருக்கு கலைப் படங்கள் எனப்படும் நல்ல படங்களின் முன்னோடி என உரைத்தால் அது மிகையல்ல. பொதுவாக கலைப்படம் என்றால் போரடிக்கும், உட்கார முடியாது என்ற எண்ணம் பலரிடம் உண்டு. முதல் படத்திலேயே இத்தனை நேர்த்தியா...! மெய்சிலிர்க்க வைக்கிறார் ஆனந்த் காந்தி.

சினிமாவை ஒரு பள்ளிக் கூடமாக நினைத்து அதில் பட்டதாரியாக நினைக்கும் அனைத்து மாணவர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும்.  வெறும் பொழுது போக்கிற்காக, ரிலாக்ஸ் செய்வதற்காக, சினிமாவிற்கு செல்ல நினைப்பவர்கள் விலகிக் கொள்வது நல்லது. 


ஒரு மிக நல்ல திரைப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...