Skip to main content

மனதை மயக்கும் மதுரை மல்லி


மதுரை நகரில் உள்ள மலர் சந்தை (மதுரை மக்களுக்கு "பூக்கடை" என்றால்தான் தெரியும்) எப்போதுமே கசகசவென கூட்டம் நிரம்பி வழியும் ஒரு இடம். கூச்சலும், இரைச்சலும் இங்கு நிரந்தரமாக இருக்கும். ஆனால், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) என்ற நறுமண பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பிரான்கோய் டிமாகி  (Francois Demachy) என்பவருக்கு இது ஒரு நறுமண வங்கி (smell bank). இவர் இங்கு ஒவ்வொரு வருடமும் நேரில் வந்து தன்னுடைய உலகப் புகழ் பெற்ற டியோர் நறுமண பொருட்களுக்கு (fragrance products) தேவையான மல்லிகை பூக்களை தேர்ந்து எடுக்கிறார்.

ஜாடோர் (J'Adore) என்ற இவர்களின் உலகப் புகழ் பெற்ற வாசனை திரவியம் (perfume). இதன் மூலப்பொருள் நம்முடைய மதுரை மல்லிதான். மதுரை மல்லியுடன், வேறு சில பூக்களின் பங்கும் இதன் நறுமணத்துக்கு காரணம் என்றாலும், டிமாகி மதுரை மல்லியின் நறுமணமும், மதுரை மண்ணின் சிறப்புமே முக்கிய காரணம் என்கிறார்.


மனிதரை மயங்க வைக்கும் சிறப்பு, மல்லிகைப் பூவுக்கு உள்ளது. அதிலும், மதுரை மல்லிக்கு இத்தகுதி அதிகம். மதுரையில்தான். மதுரை மல்லி, குண்டு, குண்டாய், கொள்ளை வெள்ளையாய், இதழ் தடிமனாய், எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல், மருத்துவ குணம் கொண்டது.இந்த மல்லிகைப் பூக்கள், மதுரையில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. மல்லிகையின், தாய்ச்செடி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இருந்து பதியன்களாக பல்வேறு இடங்களுக்கும் செல்கிறது. திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மதுரை பகுதியில் விளையும் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.


 மதுரை மார்க்கெட்டுக்கு, தினமும் 10 டன் உட்பட, 6 மார்க்கெட்டுகளிலும் 50 டன்னுக்கும் மேலாக மல்லிகைப்பூ விற்பனைக்கு வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் பேராவது இத்தொழிலில் இருப்பர்.ஜனவரி முதல் ஏப்ரல் வரை மல்லிகைப்பூ உற்பத்தி அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் மதுரை வரும் டிமாகி, நேரடியாக மல்லி விளையும் இடங்களுக்கு சென்று அங்குள்ள தொழிலாளிகளுடன் பேசுகிறார். மல்லி விளைவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் ஆராய்கிறார். பின்னர், மல்லிகை மலர்களிலிருந்து இவருடைய டியோர் நிறுவனத்திற்கு தேவையான extracts எனப்படும் பூக்களின் சாறு கொண்ட மூலப் பொருளை எந்தெந்த முறையில், அதன் குணமும் மணமும் மாறாமல் தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார்.

எங்கேயோ இருக்கும் ஒரு உலகப் புகழ் நிறுவனம் அதனுடைய perfume தயார் செய்ய நம்முடைய மல்லிகையை பயன்படுத்துகிறது. நம்மூர் பெண்கள் பூக்களை தலையில் சூடினால் அது பட்டிகாட்டுத்தனம் என்று மல்லி போன்ற மலர்களை புறக்கணித்து விட்டனர். ஹ்ம்ம்ம்ம்....எதுக்கோ தெரியாதாம் மல்லிகையின் வாசனை...

Comments

மணக்கிறது..!

வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...