Skip to main content
பொன்னியின் செல்வன்: கமல்ஹாசன் இயக்க ரசிகர்கள் விருப்பம்

பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் மறைந்த மாபெரும் எழுத்தாளர் கல்கி அவர்கள் எழுதிய அழியாப் புகழ் பெற்ற காவியம். கல்கி அவர்கள் சிவகாமியின் சபதம், அலை ஓசை போன்ற புகழ்பெற்ற சரித்திர நாவல்களை எழுதியிருந்தாலும், அவருடைய பொன்னியின் செல்வன் புதினம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது.

இந்த சரித்திர நாவலை திரைப் படமாக்க மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல் நேற்றைய செல்வராகவன் வரை நிறைய நடிகர்கள்/இயக்குனர்கள் முயற்சி செய்து முடியாமல் போய் விட்டது. 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது, இந்தப் படத்தை இயக்குனர்  பாரதிராஜா கமல்ஹாசனை வைத்து இயக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். அது நடக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்தினம் விஜய், விக்ரம், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கப்போவதாக செய்தி வந்தது. கடைசியில் அதுவும் புஸ்வாணமாக ஆனது.

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுக்கான கருத்து கணிப்பு ஒன்றை சினிமா லீட் என்ற இணைய தளம் நடத்தியது. இதில் எந்த இயக்குனர் பொன்னியின் செல்வனை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான ரசிகர்கள் கமல்ஹாசன் இயக்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த கருத்துக்கணிப்பின்படி கமலுக்கு முதல் இடமும், இயக்குனர் ஷங்கருக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளன.

கருத்துக்கணிப்பு விவரம்:
  1.  கமல்ஹாசன் - 42%
  2. ஷங்கர் - 24.4%
  3. மணி ரத்னம் - 19%
  4. செல்வராகவன் - 8%
  5. கே.எஸ்.ரவிக்குமார் -2%
  6. ஏ.ஆர். முருகதாஸ் - 3%
இதுமட்டுமல்ல, பொன்னியின் செல்வன் கதையில் வரும் கதாபாத்திரங்களையும் இந்த கருத்துக்கணிப்பு மூலம் ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். அதன் விவரம் கீழே:
  • சுந்தர சோழன் - அர்விந்த் ஸ்வாமி - கதை முழுவதும் வரும் இந்த கதாபாத்திரம் (சுந்தர சோழன்) மிக அழகானவர். கரிகாலன், அருண்மொழி வர்மன் மற்றும் குந்தவையின் தந்தை.
  • ஆழ்வார்கடியான் நம்பி - சந்தானம் - இவர் நகைச்சுவை நிரம்பிய ஒற்றர் பாத்திரத்தில் வருபவர்.
  • சின்ன பழுவேட்டரயர் - ராஜ்கிரண் - ஒரு கம்பீரமான கதாபாத்திரம். கதைப்படி பெரிய பழுவேட்டரயரின் தம்பி 
  • பெரிய பழுவேட்டரயர் - சத்யராஜ் - மற்றுமொரு கம்பீரமான, நக்கலும், நையாண்டியும் கலந்து பேசும் ஒரு பாத்திரம். 
  • பூங்குழலி - ப்ரியாமணி -கிராமத்து மீனவ பெண். மிகவும், துடுக்கான, தைரியசாலியான ஒரு கதாபாத்திரம்.
  • வானதி - சமந்தா- அருண்மொழி வர்மனின் ஜோடி. அழகான ஒரு கதாபாத்திரம். குந்தவையின் நெருங்கிய தோழியும் கூட.
  • குந்தவை தேவி - காஜல் அகர்வால் -அழகும், துடுக்குத்தனமும், தைரியமும் ஒருங்கே பெற்று, வந்தியத் தேவனின் ஜோடியான ஒரு சிறப்பான கதாபாத்திரம்.
  • நந்தினி - அனுஷ்கா -கதைப்படி பெரிய பழுவேட்டரயரின் அழகு மனைவி. கல்கியின் வர்ணனையில் ஒரு மிகப் பெரும் அழகியான இவள் மேல் வந்தியத் தேவன் ஒருவனைத் தவிர பெரும்பாலான கதாபாத்திரங்கள் மோகம் கொள்கின்றனர். வாள் வீச்சிலும், அகம்பாவத்திலும் மிகத் தேர்ந்த ஒரு கதாபாத்திரம் என்பதால் அனுஷ்கா கச்சிதமாகவே பொருந்துவார்.
  • கரிகாற் சோழன் - சீயான் விக்ரம்-முறுக்கேறிய உடல், தீர்க்கமான பார்வை, என எல்லாவற்றுக்குமே விக்ரம் மிகப் பொருத்தம்.
  • அருண்மொழி வர்மன் - தல அஜித் - ஆணழகன். பெண்களைச் சுண்டி இழுக்கும் வல்லவன். நண்பன் வந்தியத் தேவன் மேல் உயிரையே வைத்திருப்பவன்.
  • வல்லவராயன் வந்தியத் தேவன் - தளபதி விஜய்-கதைப்படி அருண்மொழி வர்மன் கதாநாயகன் என்றாலும், கதையின் நாயகன் வந்தியத் தேவன்தான். இன்றளவும் வாசர்கள் மனதில் நீங்காத ஒரு கதாபாத்திரம். வீரமும், விவேகமும், நகைச்சுவை உணர்வும் கலந்த ஒரு மிகச் சிறப்பான பாத்திரம்.
அதுசரி, உலகநாயகன் கமல் பாத்திரம் என்ன என்று கேட்கிறீர்களா?? அவர்தானே ஐயா படத்தின் இயக்குனரே !!!

ஹ்ம்ம்...இதெல்லாம் சாத்தியமா?? நடந்தால், மிக நன்றாகவே இருக்கும்.

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...