Skip to main content

36-ம் சென்னை புத்தகக் கண்காட்சி

இந்தப் புத்தகக் கண்காட்சியை, வருடம் தவறாமல், கிட்டத்தட்ட 25 வருடங்களாக பார்த்து வருகிறேன். முதலில் கடலூரில் இருந்தபோது ஆரம்பித்த பழக்கம் (1988 என்று நினைக்கிறேன்), பிறகு சேலம் சென்ற போதும் தொடர்ந்தது. 1996-இல் சென்னைக்கு இடம் பெயர்ந்த பின் சுலபமாக செல்ல முடிந்தது. கன்னிமரா ஹோட்டலுக்கு எதிரே உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்குவது என்பது ஒரு சம்பிரதாயமே. 

என்னுடைய புத்தகங்களில் ஒரு பகுதி
வருடம் முழுவது லாண்ட்மார்க், ஹிக்கின்போத்தம்ஸ் போன்ற கடைகளில் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்த நான், தற்போது இரண்டு வருடங்களாக flipkart, amazon என ஆன்லைன் புத்தகக் கடைகளில் வாங்குகிறேன். இவ்வகை ஆன்லைன் கடைகளில் (??) வாங்குவது என்பது மிக வசதியான ஒன்று. பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
  1. பெட்ரோல் செலவு, அலைச்சல் மிச்சம் 
  2. நடுஇரவு 12 மணிக்குக்கூட ஷாப்பிங் செய்யலாம் 
  3. வருடம் முழுவதும் தள்ளுபடி கிடைக்கிறது (தள்ளுபடியை கழிவு என்று சொல்லுகிறார்கள். எனக்கு என்னவோ அந்த வார்த்தையை புத்தகங்களுடன் சம்பந்தப்படுத்த கஷ்டமாக இருக்கிறது).
  4. தேவையான புத்தகங்களை தேர்வு செய்து, உடனே வாங்க முடியாவிட்டால், wishlist -இல் சேர்த்துவிடலாம். பின் எப்போது வேண்டுமோ அப்போது வாங்கிக் கொள்ளலாம். அந்த புத்தக விவரங்கள் பத்திரமாக wishlist -இல் எவ்வளவு நாளானாலும் இருக்கும் 
  5. வீட்டுக்கு புத்தகங்கள் வந்தபின் பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம்.
இந்த புத்தகக் கண்காட்சிகளுக்கு போவதில் எனக்கு ஒரு விதமான அவஸ்தை இருக்கிறது. தலைவர் சுஜாதா ஒருமுறை சொன்னது போல, இவ்வளவு புத்தகங்களை ஒரு சேர ஒரு இடத்தில பார்த்து விட்டால் ஒரு விதமான வெறி வந்து "வர்ஜா வர்ஜியமில்லாமல் " (சுஜாதாவின் வர்ணனை-ஒரு இலக்கே இல்லாமல் என்று பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன்) புத்தகங்களை வாங்கித் தள்ளிவிடுவேன். இதில் படிக்காமல் விட்ட புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.

சமீபத்தில் கரையான் படையெடுப்பினால் சில நல்ல புத்தகங்களை இழக்க நேர்ந்தது. எனவே, இனிமேல் சற்று கவனமாக இருப்பேன் என நினைக்கிறேன். இந்த வைராக்கியம் அடுத்த புத்தகம் வாங்கும் வரை தாங்கும் என நினைக்கிறேன்.


Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...