Skip to main content
அணுசக்தி: சரியான பயன்பாடு நிச்சயம் நன்மை தரும்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
(முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்)

ஜப்பானில் 2011ஆம் ஆண்டில் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சீனாவில் அணு உலைகள் கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தடையை சமீபத்தில் அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டது. சீனாவில் ஏற்கெனவே 13 அணு மின்நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. 40 அணு மின் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

“அணு சக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் சுத்தமானது. சுற்றுச்சூழல் மாசு அற்றது. அனல் மின் நிலையத்துக்கு டன் கணக்கில் நிலக்கரி தேவை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். ஆனால், குறைந்த அளவிலான யுரேனியம் தாதுவைக் கொண்டு அணுமின் நிலையங்களை செயல்படுத்த முடியும்.

அணுமின் நிலையங்களை அமைத்து 20000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தோரியம் தாது அதிகளவில் உள்ளது. எனினும், அதை பயன்படுத்தும் வகையிலான அணு உலைகளை அமைக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இப்போது யுரேனியம் தாதுவை பயன்படுத்தக்கூடிய அணு உலைகள்தான் அமைக்கப்படுகின்றன. “இந்தியாவில் அணு உலைகளை நிறுவும் பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.’

“ஜனநாயக நாட்டில் விவாதம் நடத்தவும், வாதாடவும் மக்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்தேன். அந்த அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு தொடர்பாக நானும் சில ஆலோசனைகளை அளித்துள்ளேன்.’


சுற்றுச்சூழல் மாசுபாடும், சீதோஷ்ண நிலை மாறுபாடும் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. எரிபொருள் அச்சுறுத்தலாக உறுவெடுத்துள்ளன. எரிபொருள் சுதந்திரம் (பிற நாடுகளைச் சார்ந்திருக்காத தன்மை) என்ற லட்சியத்தை அடைய பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு என்ற நிலையிலிருந்து எரிபொருள் சுதந்திரம் என்ற இலக்கை 2030க்குள் உலக நாடுகள் அடைய வேண்டும்.

இதற்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு செலவிட வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக பொருளாதார தேக்க நிலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது இந்தியாவையும், சீனாவையும் கூட விட்டு வைக்கவில்லை. இதை எதிர்கொள்ள பிராந்திய அளவிலான நாடுகளிடையே எரிபொருள், நீர்வளம், சுகாதாரம், கட்டமைப்பு, வேலைவாயப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்காக 75 கோடி அமெரிக்க டாலர்களை அடுத்த ஆண்டுகளுக்கு செலவிட வேண்டும்.

என்னதான் நாம் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறப்பட்டாலும், உலகில் 300 கோடி மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாயப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். இதற்கு “புரா’ திட்டத்தை (ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) செயல்படுத்த வேண்டும். இதற்கென இத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்க வேண்டும்.
இப்பணிகளில் கவனம் செலுத்தினால், உலகில் பயங்கரவாதம் ஒழியும்.’

நன்றி:  கலைமகள் இதழ் 

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...