Skip to main content

சேவல் சண்டை : தமிழ்நாட்டின் தனி அடையாளம்


முடிகள் அனைத்தும் சிலுப்பிக் கொண்டு நிற்க, வலது காலில் பதம் தீட்டப்பட்ட கத்தியை போர் வீரனைப் போல் ஏந்திக் கொண்டு, கூர்மையான அலகால் கொத்துவதற்கு தயாராக நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் சேவல்களின் சண்டையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?
இதெல்லாம், கிராமத்திலும், சினிமாவிலும் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்று நீங்கள் காரணம் சொன்னால், தயவு செசய்து உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள், கிராமங்களை விட அதிக அளவில் சேவல் சண்டை நடப்பது வடசென்னை பகுதியில் தான்.

ஜல்லிக்கட்டிற்கும், சேவல் சண்டைக்கும்; சங்க இலக்கியத்தில் குறிப்பு, பிராணிகள் வதை காரணம் காட்டி தடை; என சில ஒற்றுமைகள் உண்டு.

தடை நிலை இருந்தாலும், இந்த இரண்டும் நிழல் போல, தமிழர்களின் வாழ்வை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சண்டைகள் சண்டைகளாக இருந்த போது கூட இல்லாத விமர்சனங்கள், அது சூதாட்டமாக மாறிய போது பல்வேறு காரணங்களுகாக நிராகரிக்கப்பட்டது. (?)

மறைமுக சண்டை:

ராயபுரம், சூளை, பெரம்பூர், வியாசர்பாடி, எண்ணூர், திருவொற்றியூர், வால்டாக்ஸ் ஆகிய பகுதிகளில், தொன்று தொட்டு சேவல் சண்டைகள் நடந்து வருகிறது. இங்கு வளர்க்கப்படும் சேவல்கள், போட்டிக்கென்றே தயார் படுத்தப்பட்டு, விற்கப்படுகின்றன. சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில், அடிக்கடி நடை பெறும் சண்டைகளுக்கு, இப்பகுதிகளில் தான் சூதாட்டத்திற்கு பணம் சேசகரிக்கப்படுகிறது.

சேசவல் சண்டை மறைமுகமாக, மனிதர்களின் சண்டை. தங்களால் நேரடியாக செசய்ய முடியாததை, சேவல்களால் மறைமுகமாக செசய்யும் மனிதர்களால் தான், சேவல் சண்டையின் தீவிரம், இன்னும் நீர்த்துப் போகாமல் இருக்கிறது. சென்னையில் கவுரவத்திற்காக சேவல்கள் வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.பணம் என்பதைத் தாண்டி, தோற்றுப்போன எரிச்சலுடன், எப்போதும் பழிவாங்கும் வன்மத்துடன் அலையும் மனிதர்களாலும் சேவல் சண்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

"சேவல் சண்டை உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்பொழுதும் சேவல் சண்டைகள் நடக்கிறது. கிராமங்களில் பொழுது போக்குக்காக இருக்கிற சேவல் சண்டை, நகரங்களில் சூதாக மாறி விடுகிறது.

நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் சேவல் சண்டையை மையமாக வைத்து நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார், அதில் சேவல் சண்டையில் ஜெயித்தவன் மட்டுமே ஆண்மை உள்ளவன் என்றும், தோற்றவன் ஆண்மையற்றவன் என்றும் கருதப்படுவார்கள் என்று, மக்கள் நினைப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்' என்கிறார் சேசவல் சண்டைகள் குறித்து ஆய்வு செய்து வரும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

சேவல் "ஜிம்'

சண்டைக்கு சேவலை தயார் படுத்துவதே தனிக்கலை. தினமும் அதற்கு பல்வேறு பயிற்சிகள் கொடுக்க வேண்டும். பயிற்சிகள் குறித்துப் பேசிய சண்டை சேவல் பயிற்சியாளர் குமரேசன், " களத்தில விடுறதுக்கு முன்னாடி 21 நாள் அதிவேக பயிற்சி கொடுப்போம். தினமும் காலையில பெரிய தொட்டியில தண்ணி ஊத்தி அதுல நீச்சல் அடிக்க வைப்போம். அதனால சேவலுக்கு நல்ல மூச்சுப்பயிற்சி வரும். எடையும் கூடாது. அப்ப தான் களத்துல நின்னு வெளயாட முடியும். அதுக்கு சத்தான பண்டத்தை தான் கொடுப்போம். ஆட்டு ஈரல், கோதுமை, வேகவைத்த கறி கொடுப்போம். அப்ப தான் சேவல் திடகாத்திரமா இருக்கும். ஒரே அடியில, எதித்து நிக்கிற சேவல் சுருண்டுறனும்ல ' என்றார்.

அவரது பேச்சில் ஒரு படை வீரனை தயார் செசய்வது போன்ற எதிர்பார்ப்பு எதிரொலிக்கிறது. ஒரு வருடம் முழுக்க நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னரே,சேவல் களத்தில் இறக்கி விடப்படுகிறது. "சேவலை சசண்டைக்கு தயார்படுத்தும் போதே, மெல்ல பயிற்றுவிப்பவனின் மூர்க்கமான குணம் சேவலுக்கும் இறங்கி விடுகிறது' என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஒலிம்பிக்ஸை விட கெடுபிடி:

சேவல் சண்டைக்கென்று பொது விதிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட எடை, குறிப்பிட்ட உயரம் உள்ள சேவல்களோடு தான் எதிர் சேவலை சண்டைக்கு நிறுத்த முடியும். சேவல்களுக்கு ஊக்க மருந்தோ, மதுபானமோ கொடுக்கப்பட்டது தெரிந்தால், போட்டியிலிருந்து நீக்கப்படும்.

இதே போல் தொடர்ந்து செய்யப்படுவதாக தெரிந்தால், சேவலும், சேவலின் உரிமையாளரும் போட்டியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். சேவலின் காலில் கட்டி விடப்படுகின்ற கத்தி, இரண்டு அல்லது மூன்று இஞ்சு மட்டுமே இருக்க வேண்டும். சண்டை நடக்கும் பொழுது, சேவல்களை ஆசுவாசசப்படுத்துவதற்கு எடுத்துக் கொள்கிற நேரத்தை, " தண்ணிக்கு விடுவது ' என்பர்.

ஆசுவாசத்தின் பொழுது, சேசவலுக்கு தண்ணீர் கொடுத்து, மேலும் உற்சாகப்படுத்துவர். தென்மாவட்டங்களில் ஆறு கட்டங்களாக நடைபெறும் சேவல் சண்டை, 20-20 கிரிக்கெட் போல் சென்னையில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டமும், "இருபது நிமிடம்' நடைபெறும்.

சேவலின் (அலகு) மூக்கு மண்ணில் பட்டுவிட்டால் எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற சேவல், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். வெற்றி பெற்ற சேவல், போர் வீரனைப் போல் கொண்டாடப்படும்.

செசன்னையின் பல்வேறு பகுதிகளில் சேவல் சண்டையை முழுநேர தொழிலாக கொண்டிருப்பவர்கள், தொடர்ந்து சேவலை தயார்படுத்துவதும், சண்டைக்கு விடுவதுமாக இருக்கிறார்கள். புழுதி பறக்கும் பூமியில், எதற்கென்றே தெரியாமல் எதிராளியுடன் தாடை முடிகளை விரித்தபடி, சேவல் சண்டை தொடரத்தான் செய்யும்.
 
தகவல் நன்றி: மெட்ராஸ் டே பகுதி - தினமலர் இணைய தளம் 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...