Skip to main content

லான்ஸ் ஆம்ஸ்டிராங் மீது ஊக்க மருந்து புகார்



அமெரிக்காவை சேர்ந்தவர் லான்ஸ் ஆம்ஸ்டிராங்,(வயது 40). மிக நீண்ட தூர சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றார். பிரான்சில் ஆண்டுதோறும் நடக்கும் "டூர் டி பிரான்ஸ் போட்டியில் திறமை நிரூபித்தார். 21 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் சுமார் 3, 500 கி.மீ., தூரத்தை கடக்க வேண்டியிருக்கும். இதில், அசத்திய ஆம்ஸ்டிராங் 1996 முதல் 2005 வரை தொடர்ந்து 7 முறை பட்டம் வென்று சாதனை படைத்தார். 


சைக்கிள் பந்தய சாம்பியன் லான்ஸ் ஆம்ஸ்டிராங், தன் மீதான ஊக்க மருந்து பிரச்னையை எதிர்த்து போராடப் போவதில்லை என நேற்று அறிவித்தார். இதையடுத்து இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. "டூர் டி பிரான்ஸ் தொடரில் வென்ற 7 பட்டங்கள் உட்பட இவரது சாதனைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

1996ல் "டெஸ்டிக்குலர் கேன்சரால் பாதிக்கப்பட்டார். இது மூளை, நுரையீரலில் பரவியது. பின் "டெஸ்டிக்குலர் பகுதியில் " அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து "கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு, "கேன்சரில் இருந்து மீண்டார். இவரை முன்னுதாரணமாக கொண்டு தான் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ், கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டார்.

கடந்த 2011ல் ஓய்வு பெற்ற ஆம்ஸ்டிராங், கேன்சர் அறக்கட்டளை மூலம் கோடிக்கணக்கில் நிதி திரட்டி, வசதியற்ற நோயாளிகளுக்கு உதவி வருகிறார்.
 
கேன்சரில் இருந்து மீண்ட இவரால், ஊக்க மருந்து சர்ச்சையில் இருந்து மட்டும் மீள முடியவில்லை. 1999ல் இவரது சிறுநீர் மாதிரியில்                                      "கார்டிகோஸ்டீராய்டு" என்ற தடை செய்யப்பட்ட மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பின் 2008 முதல் 2009 வரை 24 முறை இவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்தது. இருப்பினும், அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு மையம்(யு.எஸ்.ஏ.டி.ஏ.,) இவருக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்தது. இதனை எதிர்த்து அமெரிக்க பெடரல் கோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து யு.எஸ்.ஏ.டி.ஏ., தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. 

இந்நிலையில் நேற்று திடீரென தனக்கு எதிரான ஊக்க மருந்து சர்ச்சையில், போராட்டத்தை தொடரப் போவதில்லை என தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

எனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்கின்றனர். இனிமேல் இப்பிரச்னை பற்றி எந்த சூழ்நிலையிலும் எதுவும் பேசப் போவதில்லை. "டூர் டி பிரான்ஸ் தொடரில் நான் தான் 7 முறை வென்றேன் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, எனது பெருமையை யாரும் பறிக்க முடியாது. கேன்சர் சேவை பணிக்கு என்னை முழுமையாக அர்ப்பணிக்கப் போகிறேன். 

ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் ஒரு கட்டத்தில் "போராடியது போதும் என்று சொல்ல நேரிடும். எனக்கு இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. இந்த முட்டாள்தனமான ஊக்க மருந்து பிரச்னை காரணமாக எனது பணியிலும், குடும்பத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் போட்டிகளில் பங்கேற்றேன். ஆனால், சிலர் தனிப்பட்ட லாபத்துக்காக என் மீது தவறாக குற்றம்சுமத்துகின்றனர். இதில் நியாயமில்லை". ஒவ்வொரு போட்டியிலும் நான் பல்வேறு போதை/ஊக்க மருந்து சோதனைகளுக்கு பின்னரே பங்கு பெற்றேன். ஏழு முறையும் சாம்பியன் பட்டங்களை வென்றது நான்தான் என்பது இந்த உலகுக்கு தெரியும். எனக்கு அதுவே போதும்".
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தனக்கு எதிரான ஊக்க மருந்து பிரச்னையில் போராட மறுப்பதால், ஆம்ஸ்டிராங் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கு சமமாக கருதப்பட்டது. இதையடுத்து அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு மையம் இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இவரது 7 "டூர் டி பிரான்ஸ் உட்பட அனைத்து பட்டங்களும், போட்டிகளின் போது அவர் வென்ற  பரிசுத் தொகையும் மொத்தமாக பறிக்கப்பட்டன. 

வாழ்வில் பல தடைகளை வென்று போராட வேண்டும் என்று வலியுறுத்திய இவருடைய "Its Not About the Bike" என்ற அருமையான புத்தகம் ஒரு மிகச் சிறந்த வழிகாட்டி. 

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...