Skip to main content

மருந்து பிரசாதம் தரும் நெல்லிகட்டு பகவதி அம்மன் கோவில்!



கோவிலுக்கு சென்றால் விபூதி, குங்குமம், சந்தனம் பிரசாதமாக வாங்குவோம். கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில், பழமையான நம்பூதிரி குடும்பத்து கோவிலில், மருந்தையே பிரசாதமாக தருகின்றனர். "குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக அமைகிறது, ஞாபக சக்தி கூடுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மன அமைதி ஏற்படுகிறது' என்ற நம்பிக்கையோடு, இங்கு அம்மனை கும்பிட்டு, மருந்து பிரசாதம் வாங்கிச் செல்பவர்கள் ஏராளம்.


எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளத்தில் உள்ளது நெல்லிக்காட்டு பகவதி கோவில். எர்ணாகுளத்தில் இருந்து, 48 கி.மீ., தூரத்தில் உள்ள, கோட்டயத்தில் இருந்து அங்கமாலி செல்லும் பாதையில், 37வது கி.மீ.,தொலைவில் இக்கோவில் உள்ளது. கல்விக்கு சரஸ்வதி போன்று, (திரு மந்தம்குன்னு)"மருத்துவத்திற்கான தெய்வம்' என வணங்கப்படும் தன்வந்திரிமூர்த்திக்கும், பகவதி அம்மனுக்கும் தனித்தனி கோவில்கள் இங்கு உள்ளன. 


ஆடி மாதத்தில், இக்கோவிலில் வலம் வந்து, நேர்ச்சைகள் நடத்தி, மனமுருக பிரார்த்தனை செய்து அம்மனை வழிபட்டால், முன்ஜென்ம பாவம் போய், நம் நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.

"இறைவன் தரும் நோய்கள், இறைவன் அருளால் தான் நீங்கும்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனை நடத்தி, அம்மன் முன்னிலையில், பல்வேறு ஆயுர்வேத, பாரம்பரிய மருந்து பொருட்கள் எல்லாம் கலந்து இந்த, "அபூர்வ மருந்து' தயார் செய்யப் படுகிறது. இதை, 41 நாட்கள் அம்மன் கருவறையில் வைத்து, பூஜை செய்வர். ஆடி மாதம் முதல் தேதியிலிருந்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்குகின்றனர். 

இந்தாண்டு ஆக., 16ம் தேதி வரை, காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 வரை நடை திறந்திருக்கும் போது பிரசாதம் வழங்கப்படுகிறது.

கோவில் நிர்வாகி என்.பி.நாராயணன் நம்பூதிரி கூறுகையில்,""இந்த ஒரு மாதம் மட்டுமே, ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருவர் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆக.,11 ம் தேதி நடக்கும், "மருந்து பொங்கல்' நிகழ்ச்சி இங்கு விசேஷமானது. அன்று பொங்கலிட வரும் பக்தர்களுக்கு, பொங்கலுக்கான மருந்தை நாங்கள் தருவோம். அரிசி, சர்க்கரை அவர்கள் எடுத்து வர வேண்டும். கோவிலில் இருந்து தரும் மருந்து பிரசாதத்தை, அம்மன் முன் சாப்பிட வேண்டும். 

வர இயலாத நோயாளிகளின் உறவினர்கள் குறைந்த கட்டணம் செலுத்தி, மருந்து பிரசாதத்தை வாங்கிச் செல்லலாம். கோவிலில் உள்ள பாரம்பரிய, அரிய சுவடிகளில் கூறப்பட்டுள்ளவாறு பொருட்கள் சேர்த்து மருந்து தயாரிக்கப்படுகிறது,'' என்றார்.

அம்மன் அருள் மழை பொழியும் இந்த கோவில் பற்றி, மேலும் தெரிந்து கொள்ள, 09447 875067ல், தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர் இணைய தளம்.

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...