Skip to main content

                                    விஸ்வரூபத்தில் கமலின் சம்பளம் ரூ. 45 கோடி!!!



விஸ்வரூபம் படத்தில் கமல் ஹாசனின் சம்பளம் ரூ. 45 கோடி என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் இந்தியில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் உலக அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் கமல் ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல கெட்டப்களில் வருகிறார்.

படத்தில் கிராபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளார்களாம். இந்த படத்தின் வியாபாரம் ரூ.120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காதல் ரோஜாவே படத்தில் நடித்த பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் சிங்கப்பூரில் நடந்த ஐஐஎப்ஏ விழாவில் வெளியிடப்பட்டது. டிரெய்லரைப் பார்த்தே அனைவரும் அசந்துவிட்டார்களாம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஸ்வரூபம் படத்திற்காக கமலுக்கு ரூ.45 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்று தயாரிப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. படத்திற்காக தன்னை வருத்திக்கொள்ளும் கமலுக்கு கோடி, கோடியாக கொடுக்கலாம், தப்பில்லை.

சம்பள விஷயத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கமல் இந்தப் படத்தின் மூலம் வெற்றியிலும் விஸ்வரூபம் எடுக்க வாழ்த்துக்கள்.


Comments

யானும் அவ்வண்ணமேகோரும் கமல் ரசிகன்...
This comment has been removed by the author.

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...