Skip to main content


செய்வாரா ஆனந்த்?

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற, விஸ்வநாதன் ஆனந்த், முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார். அப்போது, ஆனந்த்திற்கு, தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார்.

இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்க்கும் நோக்குடன், கடந்த 1992ம் ஆண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை, முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் உயர்ந்த சாதனை புரியும் வகையில், பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கான ஊக்கத்தொகையும் இருமடங்காக்கப்பட்டது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த மாதம் நடந்த, உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்று, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்று, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த, விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல், விஸ்வநாதன் ஆனந்த், தன் மனைவி அருணாவுடன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது, போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்த முதல்வர், 2 கோடி ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

சந்திப்பு நிகழ்ச்சி முடிந்து, வெளியில் வந்த விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில்,""தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 7 வயது முதல் 17 வயதுள்ள மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை செஸ் வீரர்களை உருவாக்கும். மேலும், ஆசிரியர்களும் செஸ் போட்டியில் பயிற்சி பெற வேண்டும். செஸ் போட்டியானது உயர்ந்த நிலைக்கு செல்ல, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்,'' என்றார்.

நன்றி: தினமலர்

என்னுடைய கருத்து:
மறுபடியும் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்துக்கு வாழ்த்துக்கள். ஆனந்த் ஏற்கனவே இந்த போட்டியிலும், வேறு பல போட்டிகளிலும் வென்றதின் மூலம் பல கோடிகளை சம்பாதித்துவிட்டார். எனவே அவருக்கு இந்த "ஊக்கத் தொகை" சற்று அதிகம்தான். அவரும் இந்தப் பணத்தை தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே, முதலீடு செய்யப்போவதில்லை. இரண்டாவது, ஆனந்தைப் போன்று ஏற்கனவே பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்து விட்டவர்கள், இங்கே, தமிழ்நாட்டில், வசதி இல்லாத, ஆனால் ஆர்வம் மிக்க இளைஞர்களுக்கு ஒரு "செஸ் அகாடமி" ஆரம்பித்து இலவசமாக செஸ் கற்பிக்கலாமே; ஆனந்த் இதைச் செய்தாரென்றால் அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த பெரும் பரிசு நியாயம் என்று சொல்லலாம்; செய்வாரா ஆனந்த்?

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...