இன்னுமொரு ரயில் விபத்து. இதுவரை 13 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். காரணம் எப்போதும் போல இன்னும் அறியப்படவில்லை. அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. கடந்த முதல்வரோ, இன்றைய முதல்வரோ போட்டி போட்டுக் கொண்டு இலவச தொலைக் காட்சி பெட்டி, இலவச கிரைண்டர், மிக்சி என்று நம் வரிப் பணத்தை பாழடிப்பதை விட்டுவிட்டு இதுபோன்ற வசதிகளை பெருக்குவதற்கு ஏன் முயற்சிப்பதில்லை? இந்த ஞானோதயம் இவர்களுக்கு வர இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை.
நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

Comments