Skip to main content

வேற்று கிரக வாசிகளின் வருகையும், நம் உலகத்தின் அழிவும்?



அழிந்து விடுவோமா?
வேற்று கிரக வாசிகளின் வருகை பற்றி ஏராளமாக சலிக்க, சலிக்க புத்தகங்களும், ஹாலிவுட் திரைப் படங்களும் வந்தவண்ணம் உள்ளன. இதில் அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரசியமான ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் 
  1. வேற்று கிரக வாசிகள் (ETI எனப்படும் Extra Terrestrial Intelligence) இந்த பரந்த அண்டத்தில் எங்காவது இருக்கிறார்களா?, அல்லது 
  2. நாம் மட்டும்தான் இருக்கிறோமா?, 
  3. அவ்வாறு அவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை?, 
  4. நாம் கிட்டத்தட்ட 50 வருடங்களாக முயன்றும் ஏன் நம்மால் எந்தவிதமான தொடர்பும் (Contact) ஏற்படுத்த முடியவில்லை? 
  5. அவர்கள் நம்மைவிட அதி புத்திசாலிகளாக இருப்பதால் நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லையா அல்லது நம்மைப் போலவே அவர்களும் இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நம்மைத் தேடுகிறார்களா?
  6. நம்முடைய தேவை நாளுக்குநாள் வளர்ந்துவரும் நேரத்தில், நம்முடைய அகோரப் பசிக்கு உலகம் அழியும் முன் காப்பதற்கு அவர்கள் முயற்சிப்பார்களா?
ஒரு வேளை அவ்வாறு அவர்கள் இவ்வுலகிற்கு வந்தால் என்னென்ன நடக்கலாம் என்று இந்த விஞ்ஞானிகள் மூன்று விதமான அனுமானங்களை வெளியிட்டுள்ளனர்.

(பெரிதாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)

(Beneficial): நன்மை
  • நம்முடன் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நம்மிடம் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தின் நன்மைகளை பற்றி விவாதிக்கலாம்.
  • நம்முடைய உலகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற நமக்கு வழி காட்டலாம்.
  • நம்முலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லலாம்.
  • ஒருவேளை, நம்முடன் சுமுகமாக இல்லாத பட்சத்தில் நாம் அவர்களை வெல்ல முயற்சிக்கலாம்.
(Neutral): நடுநிலை
  • அவர்கள் ஒருவேளை வேண்டுமென்றே நம்முன் வராமல் ஒளிந்து கொண்டிருக்கலாம்.
  • நம்முடன் தொடர்பு கொள்ள முடியாமல் வெகுதொலைவிலோ, அல்லது நம் அறிவுக்கெட்டாத வேறு புதிய வடிவில், உருவத்தில், பரிமாணத்தில் இருக்கலாம், அல்லது 
  • நம்முடன் தொடர்பு கொள்ள ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.
  • இப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நமக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லாமல் இருக்கலாம் அல்லது நமக்கு சிறிய அளவில் தொந்தரவு கூட கொடுக்கலாம்.
(Harmful): தீமை
  • சுயநலத்துடன் இவ்வுலகை ஆக்கிரமிக்கலாம்.
  • நம்மை சாப்பிட்டுவிடலாம்
  •  நம்மை  அடிமைப்படுத்திவிடலாம்
  •  நம்மை அழித்துவிடலாம்.
  • இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது, அவர்களே முழு பிரபஞ்சத்தையும் ஆளவேண்டும் என்ற தீவிர நோக்கில் பலவிதமான முறைகளில் நம்மை ஒழிக்க திட்டமிடலாம்.
 இப்படி பலவிதமான சுவாரசியங்களுடன் விரிகிறது இந்த ஆராய்ச்சி கட்டுரை. முழு கட்டுரைக்கு இங்குள்ள இணைப்பை சொடுக்கலாம்:

http://arxiv.org/abs/1104.4462

ஹ்ம்ம்ம்....காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!


Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...