Skip to main content

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான நாடுகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


அமெரிக்காவை சார்ந்த செய்தி நிறுவனமான தாம்சன் ராய்ட்டர்ஸ் (Thomson Reuters) சமீபத்தில் வெளிட்டுள்ள அறிக்கை ஒன்று உலகெங்கிலும் அதிர்ச்சி அலையைக் கிளப்பியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவதாக காங்கோ, மூன்றாவதாக பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. 

இதில் என்ன அதிர்ச்சி? இந்த வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பது இந்தியா!!!

ஆமாம், இந்தியாவேதான். இது என்ன கூத்து என்று கேட்கலாம். அந்த அறிக்கையில் காரணங்கள் இருக்கின்றன.

எந்தெந்த விதத்தில் பாதுகாப்பின்மை இருக்கிறது என்று பார்த்தால், இந்த அறிக்கை அதை பல்வேறுவிதமான அளவீடு (parameters) மூலம் கணக்கிட்டுள்ளது.

  1. ஆப்கானிஸ்தான்: இங்கு வாழும் 11 பெண்களில் ஒருவர் மகப்பேறு காலத்தில் தகுந்த கவனிப்பு இல்லாமல் இறக்கிறார். கிட்டத்தட்ட 87 % பெண்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 % பெண்கள் விருப்பமில்லாமல் திருமணத்திற்கு வற்புறுத்தப்படுகிறார்கள்.
  2. காங்கோ: இங்கு வாழும் பெண்களில் கிட்டத்தட்ட 4 . 5 லட்சம் பெண்கள் ஒவ்வொரு வருடமும் கற்பழிக்கப்படுகிறார்கள்-இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 1200 பெண்கள் என்ற கணக்கில். 90 % பெண்கள் வீடுகளில் (தந்தை, உறவினர் மற்றும் கணவர் மூலம்) கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
  3. பாகிஸ்தான்: காலாச்சார சீரழிவு, சமுதாய மூட நம்பிக்கைகள், மத சம்பந்தமான கட்டுப்பாடுகள் என்பன போன்ற பல விஷயங்களில் பெண்கள் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.காங்கோ ஓலவே இங்கும் கிட்டத்தட்ட 90 % பெண்கள் வீடுகளில் (தந்தை, உறவினர் மற்றும் கணவர் மூலம்) கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், பெண் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் 
  4. இந்தியா: 1 கோடிக்கும் மேல் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுகிறார்கள். பெண் சிசுக் கொலை, கருச்சிதைவு  போன்ற காரணங்களால் கடந்த நூற்றாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடக்கிறது.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொரும் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயமில்லை இது. உடனே விழித்துக்கொண்டு செயலில் இறங்கி நம் சகோதரிகளையும், தாய்களையும் காப்பாற்ற வேண்டும். 

படம் நன்றி: trust .org வலைத்தளம்
 தகவல் நன்றி: ஹிந்து பிசினஸ்லைன் செய்தித்தாள் 

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...