Skip to main content

நிஷ்களங் மகாதேவ்: கடல் நடுவே ஒரு சிவன் கோயில். கடல் உள்வாங்கும் ஒரு அதிசயம்!

நிஷ்களங் மகாதேவ் கோயில்-கடற்கரையில் இருந்து 


கடல் உள்வாங்கிய பிறகு -கோயிலின் தோற்றம் 

கடல் நடுவே இருக்கும் சிவனுக்கு ஆராதனை

சமீபத்தில் சன் டி.வியில் ஒளிபரப்பட்டு மிகப் பிரபலமடைந்த கடல் கோயில்  நிகழ்ச்சியை பார்க்கவில்லையா என என் நண்பர் ஒருவர் கேட்டபோது, இன்டர்நெட் துணை இருக்கும்போது என்ன கவலை என்று நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியையும், அதன் பின்புல தகவல்களையும் தேடிய போது பல ஆச்சரியமான விஷயங்களை சந்திக்க முடிந்தது.

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் கொலியாக் என்ற இடத்தில் இருக்கும் இந்த அற்புதமான கோயிலைப் பற்றி:

கொலியாக் பாவ்நகரில் இருந்து 23 கி.மீ. கிழக்கில் இருக்கிறது. அரபிக் கடலின் ஓரத்தில் இருக்கும் இந்த சின்ன கிராமத்தில் மாதம் ஒருமுறை  இந்த அற்புதம் நிகழ்கிறது. 

இங்கு கடல் நடுவே ஒரு கொடிக் கம்பமும், ஒரு கல் தூணும் மிகத் தொலைவிலிருந்தே தெரிகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு அடுத்த நாள் காலை கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் கூடுகிறது.  காலை சுமார் 9  மணிக்கு மேல் மெதுவாக கடல் உள்வாங்குகிறது. கொஞ்சம், கொஞ்சமாக கல் தூண் மற்றும் கொடிக்கம்பம் தெளிவாகத் தெரிவதுடன், ஒரு பெரிய சமவெளியில் சிறிய இடைவெளியில் 5 சிவலிங்கங்களும் காட்சி தருகின்றன. பக்தர்கள் நிதானமாக கடல் உள்வாங்கிவிட்ட மணல் பரப்பில் நடந்து சென்று கோயிலை அடைகிறார்கள். கையில் கொண்டுவந்துள்ள பூ மற்றும் பால் ஆகிவற்றை அங்குள்ள லிங்கம் ஒவ்வொன்றின் மேலும் படைக்கிறார்கள். பஜனை செய்கிறார்கள். கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட
1.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த கடல் கோயில். நிஷ்களங் மகாதேவ் என்றால் பாவத்தைப்  போக்குகிறவர், எந்தவித களங்கமும் இல்லாதவர் என்று பொருள் சொல்கிறார்கள்.

மாலை நெருங்குகிறது. ஒவ்வொருவராக கடற்கரைக்கு திரும்பி வர ஆரம்பிக்கும்போது கடல் மீண்டும் அந்தக் கோயிலை முழுதாக ஆக்கிரமிக்கிறது. மீண்டும் கொடிக் கம்பமும், கல் தூணும் மட்டுமே தெரிகின்றன. நண்பர் சிவா இந்தப் பதிவை படித்துவிட்டு, இதுபோன்ற கடல் உள்வாங்கும் சமாச்சாரம் இந்தியாவிலேயே அந்தமான், லட்சத்தீவு ஆகிய இடங்களில் மாதம் ஒரு முறை கடல் உள்வாங்குகிறது, ஆங்கிலத்தில் இதை இஸ்துமஸ் (Isthumus) என்று சொல்லியிருக்கிறார். நன்றி நண்பரே. உண்மைதான், பல இடங்களில் கடல் இது போல உள்வாங்கலாம், ஆனால், அந்தக் கடல் நடுவே ஒரு புராதனமான சிவன் கோயில் இருப்பது இங்கு மட்டுமே, அதுவே இந்த இடத்தின் சுவாரசியம்.

பாண்டவர் காலத்து கோயில் என்கிறார்கள். உண்மை அந்த சிவனுக்கே வெளிச்சம். இத்துடன் சன் டி.வியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பை இணைத்திருக்கிறேன்.



                                              கடல் கோயில் - வீடியோ பகுதி 1


                                             
                                             கடல் கோயில் - வீடியோ பகுதி 2

(நன்றி: சன் டி.வி மற்றும் இந்த வீடியோவை You Tube இல் இணைத்த அந்த முகம் தெரியாத நண்பருக்கும்).

Comments

படங்கள் அருமை..தகவலுக்கு நன்றி..
புதிய தகவல்.

ஆச்சரியம் ஆனால் உண்மை!!!!!

அறியத் தந்தமைக்கு நன்றி.
Arun Ambie said…
மிக நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி. நமச்சிவாய வாழ்க.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...