Skip to main content

ஆஸ்கர் பரிசளிப்பு விழா - வெற்றி பெற்ற படங்கள்

தி ஃ பைட்டர்  (The Fighter) - திரைப்பட விமர்சனம்




பாக்சிங் எனப்படும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து ரேஜிங் புல் (Raging Bull ), ராக்கி (Rocky ), தி மில்லியன் டாலர் பேபி (The Million Dollar Baby ), அலி (Ali ) போல நிறைய படங்கள் வந்து விட்டன. இதில் அலி போன்ற படங்கள் "பயோ-பிக்" (Bio - pic ) என்ற வகையைச் சார்ந்தவை. அதாவது ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள படம் தி ஃ பைட்டர்  (The Fighter). 

குத்துச் சண்டை போட்டிகளில் ஹெவி வெயிட், லைட் ஹெவி வெயிட், மிடில் வெயிட், வெல்டர் வெயிட் (Welter weight ) என்று பல வகைகள் உண்டு.  இந்தப் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர்களின் உடல் கனம் (வெயிட்) அந்தந்த போட்டிகளுக்கு ஏற்றவாறு மாறும். 

ராக்கி, அலி போன்ற படங்கள் ஹெவி வெயிட் போட்டியாளர்களைப் பற்றிய படங்கள், தி ஃ பைட்டர் வெல்டர் வெயிட் போட்டியாளரை முன் வைத்து எடுத்த படம். வசூலில் மட்டுமல்லாது, சிறந்த திரைப்படம் என பல்வேறு குத்துச் சண்டை வல்லுனர்களும் பாராட்டிய படம் இது. கொஞ்சம் தாமதமாக இங்கு வந்திருக்கிறது.

இதில் மார்க் வால்பர்க்கின் அண்ணனாக, முன்னாள் வீரனாக, இந்நாள் போதை மருந்துக்கு அடிமையாக நடித்துள்ள கிறிஸ்டியன் பேல் மற்றும் இந்த இருவரின் தாயாராக நடித்துள்ள மெலிஸ்ஸா லியோ ஆகிய இருவருக்கும் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

கதாநாயகன் மிக்கி வார்ட் (மார்க் வால்பர்க்) ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய அண்ணன் டிக்கி எக்லன்ட் (கிறிஸ்டியன் பேல்) ஒரு முன்னாள் வெல்டர் வெயிட் சாம்பியன். ஆனால் இப்போது போதை மருந்துக்கு அடிமையானவன். என்னதான் திறமையானவன் என்றாலும் அவனுடைய பயிற்சியளிப்பு அவ்வளவாக சரியில்லாத காரணத்தினால் மிக்கி பங்குபெறும் எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைகிறான். டிக்கியை விடுத்தது அவன் வேறு யாரிடமும் பயிற்சி பெறக்கூடாது என அவன் தாய் பிடிவாதமாக இருக்கிறாள். 

தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் மிக்கி நொந்து போகிறான். அப்போது அவனுடைய முன்னாள் கல்லூரித் தோழி சார்லீன் (ஆமி ஆடம்ஸ் ) அவனுக்கு ஆதரவாக இருக்கிறாள். மிக்கி அந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்து ஒரு தேர்ந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெற வேண்டும் என சொல்கிறாள். மிக்கிக்கும் அது சரி என்றே படுகிறது. ஆனால், அவனுடைய தாய் மற்றும் சகோதரிகள் அதை வன்மையாக எதிர்க்கிறார்கள். மிக்கி அவனுடைய சகோதரன் டிக்கியிடம் மட்டுமே பயில வேண்டும் என்கிறார்கள். 

இந்த சந்தர்பத்தில் மிக்கியின் தந்தை அவனுக்கு உதவ முன் வருகிறார். டிக்கி மற்றும் மிக்கியின் தாய் ஒருவரே என்றாலும் இருவருக்கும் வெவ்வேறு தந்தைகள். எனவே மாற்றான் தந்தைக்கு பிறந்த டிக்கி, மிக்கிக்கு சரியான முறையில் பயிற்சி அளிக்க முடியாது என்று மிக்கியின் தந்தையும் நம்புகிறார்.

குடும்பத்தின் பிடியிலிருந்து வெளியேறி வெற்றி மேல் வெற்றி பெரும் மிக்கி தன்னுடைய குடும்பத்தையோ, சகோதரனையோ வெறுப்பதில்லை. மாறாக தன்னுடைய சகோதரன் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டுமென விரும்புகிறான். 

ஒரு உண்மையான சம்பவத்தை பின்னணியில் வைத்து மிகவும் அருமையான முறையில் எடுக்கப்பட்டுள்ள படம்.
  • 25  மில்லியன் அமெரிக்க டாலர்களில் மார்க் வால்பர்க் தயாரித்து நடித்துள்ள இந்தப் படம் ஏற்கனவே 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்துவிட்டது. 
  • பேட் மேன் படங்களில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்ற கிறிஸ்டியன் பேல் ஒரு சாதாரணமான இரண்டாவது ஹீரோ பாத்திரத்தில், குறைந்த சம்பளத்தில் நடித்துள்ளார். 
  • போதைப் பழக்கத்துக்கு அடிமையாக நடிக்க பல நாட்கள் சரியாக சாப்பிடாமல், உடலை மெலிய வைத்து வெற்றிகரமாக நடித்த பேலுக்கு கிடைத்த விருது உண்மையிலேயே சரியான மரியாதை.
  • படத்துக்கு ஒரு பழைய லுக் வரவேண்டுமென 1990 களில் உபயோகப்படுத்திய கேமராக்களை வைத்து படமாக்கியுள்ளனர். 
  • கிறிஸ்டியன் பேல் மற்றும் மார்க் வால்பர்க் இருவரும் இதற்கு முன் சேர்ந்து நடித்ததில்லை என்றாலும் இந்தப் பாத்திரத்திற்கு பேல் மிகப் பொருத்தமாக இருப்பார் என மார்க் நம்பியதால் பேல் ஒப்புக்கொண்டார். 
ஆஸ்கர் விருது பெற்ற படங்களின் விமர்சனம் தொடரும்....

Comments

S. Ravichandran said…
Very Interesting and happy that you brought this to my light.
Thanks Sridhar

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.