Skip to main content

கொடிய விஷம் கொண்ட "தங்கத் தவளை''

டே, அவனா நீ?

 உலகத்தில் வசிக்கும் உயிரினங்களில் (மனிதனைத் தவிர) மிகக் கொடிய விஷம் கொண்ட உயிரினம் ஏது என்றால் பெரும்பாலானோர் பாம்பையோ அல்லது சிலந்தியையோ குறிப்பிடுவார்கள். ஆனால், உண்மையில் அத்தகைய பெருமை வெறும் 5cm அளவிலான ஒரு தவளை!

நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். இந்த, "கோல்டன் டார்ட் பிராக்' (Golden Dart Frog)  கொலம்பியா கடலோரத்தில் உள்ள அடர்ந்த மழைக் காடுகளில் அதிகமாக வாழ் கின்றன. அக்கால கொலம்பிய மக்கள், இத்தவளையின் விஷத்தை பிரித்தெடுத்து, அதை ஈட்டி, அம்பு முனைகளில் தடவி வேட்டைக்கு பயன்படுத்தி யுள்ளனர்.

எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், தவளை விஷம் தடவப்பட்ட அம்பு தாக்கியவுடன் மயங்கி விழுந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் விஷத்தன்மை கொண்ட தவளைகள் 100 வகை உள்ளன. இவற்றில், "கோல்டன் டார்ட் பிராக்' வகை தவளைகள் தான் பெரியவை. இந்தத் தவளைகளின் உடலில் இருக்கும் batrachotoxin எனப்படும் கொடிய விஷம் உடனடியாக நம் இதயத் துடிப்பை நிறுத்திவிடும். இந்தத் தவளையின் உடம்பில் இருக்கும் 1 mg (மில்லிகிராம்) விஷம் 10-15 மனிதர்களைக் கொள்ளும் திறன் வாய்ந்தது. 


கொலம்பியா காடுகளில் உள்ள குறிப்பிட்ட சில தாவரங்கள், ஈக்கள், வண்டுகள், எறும்புகள், கரையான்கள் ஆகியவையே இவற்றின் முக்கிய உணவு. இத்தவளைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதற்கு, மனிதர்களால் தொடர்ந்து மழைக்காடுகள் அழிக்கப்படுவதே காரணம். இன்றைய நிலையில் இந்த தவளை இனம், வேகமாக அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தாவும் தங்கத் தவளைகள் பெரும்பாலும் மஞ்சள் வண்ணத்தில் தோற்றமளிக் கின்றன. இருப்பினும், ஆரஞ்சு, இளம்பச்சை உள்ளிட்ட வண்ணங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்த தவளைகள் வாழும் இடத்திற்கேற்ப அவற்றின் நிறங்கள் மாறுபடுவதாகவும், இதன் மூலம் இத்தவளைகள் தங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

"தாவும் தங்க தவளை' களின் விஷத் தன்மை குறித்து ஒரு சோதனை மேற் கொள்ளப் பட்டது. அதில், அத்தவளைகளின் இயற்கை யான வசிப்பிடங்களில் இருந்து மாற்றி, வழக்கமான உணவிற்கு பதில் வேறு உணவுகளை கொடுத்தனர். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் சோதனை செய்ததில், அந்த தவளைகள் விஷத்தன்மை மிகவும் குறைந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, அடர்ந்த காடுகளில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட தாவரங்கள் மற்றும் சிறு பூச்சிகளை உட்கொள்வதால் மட்டுமே இத்தவளைகள் கொடிய விஷத்தை பெறுகின்றன என்று நம்பப்படுகிறது. தற்போது, இத்தவளைகளின் விஷத்தை கொண்டு சக்தி மிக்க வலி நிவாரண மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

நன்றி: www.fact-o-tron.com இணயதளம்

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...