Skip to main content

2010 இல் படாதபாடுபட்ட உலகம்

இத்தனை காலமும் நாம் செய்து வரும் கொடுமைகளுக்கு பழி வாங்குவது போல அமைந்தது சென்ற வருடம் நாம் சந்தித்த இயற்கைச் சீற்றங்கள் அமைந்தன. 2010 இல் உலகமெங்கும் நடந்த சில இயற்கை சீரழிவுகளின் தொகுப்பு இது:

நிலநடுக்கங்கள், நிலச் சரிவுகள், புயல்கள், வெள்ளம், எரிமலைகள், சுனாமி என்று எல்லாமுமாகச் சேர்ந்துகொண்டு 2010 ம் ஆண்டை புரட்டிப் போட்டுவிட்டன.

இதோ ஒரு பயங்கர உதாரணம்: அக்டோபர் மாதத்தில் 24 மணிநேர இடைவேளையில் அடுத்தடுத்து 7.7 ரிக்டர் அளவில் மாபெரும் நிலநடுக்கமும், கிட்டத்தட்ட 5000 பேரை பலி வாங்கிய சுனாமியும், நான்கு இலட்சம் பேரை பதற வைத்து, பல நூறு பேர்களை பழி வாங்கிய எரிமலையின் சீற்றமும் எல்லோரையும் குலைநடுங்க வைத்துவிட்டன.

நூறு வருடங்களில் இதுபோன்ற ஒரு பயங்கர வருடத்தைப் பார்த்ததில்லை என்று விஞ்ஞானிகளும், சுற்றுப்புற ஆர்வலர்களும் பதறும் அளவுக்கு சென்ற ஆண்டு ஏகப்பட்ட பயங்கரங்களை நிகழ்த்தியுள்ளது. 

ஜனவரி 2010 ம் ஆண்டு ஹைடியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 220,000 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

பிப்ரவரியில் சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள்.

 உலகெங்கும் global warming இன் விளைவாக ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவில் வெப்பம் மோசமாக தாக்கியபோது, பாகிஸ்தானில் வெள்ளம் கரைபுரண்டோடியது. கிட்டத்தட்ட 62,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட இடத்தில கிட்டத்தட்ட 17,000 பேர் இறந்தனர். அதேசமயம் ரஷ்யாவில் ஏற்பட்ட ஹீட்வேவ் -111*F-இதுவரை இல்லாத ஒரு வெப்ப அளவாகும். ரஷ்யா மட்டுமல்லாது பிற 18 நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது.

இதைத் தவிர, வருடக் கடைசியில் ஆஸ்திரேலியாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, பெரும்பாலான நகரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பும், உயிர் சேதமமும் ஏற்பட்டன. லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத பனிப்புயலினால் (blizzard) எண்ணற்ற மக்கள் அவதிக்குள்ளானார்கள், அவர்களின் தினசரி வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இயற்கையை வெல்ல நினைக்கும் முயற்சிகளை விட்டுவிட்டு, இயற்கையோடு ஒன்றிச் செல்லும் சுலபமான வழியை மேற்கொண்டால் எவ்வளவோ நன்மைகள் நிகழும். நாம் எவ்வளவு சீக்கிரம் இதை உணருகிறோமோ அவ்வளவு நல்லது. இல்லாவிட்டால், 2012, The Day After Tomorrow ஆகிய படங்களில் வருவது போல எண்ணற்ற இன்னல்களை மனிதகுலம் சந்திக்க வேண்டியிருக்கும்.

2011 ம் ஆண்டு எந்தவிதமான இன்னல்களும் இல்லாத ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனே அருள்புரிய வேண்டும்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.