Skip to main content

ரஜினி ஒரு முட்டாள்-நடிகர் விவேக் பேட்டி

 

ஆங்கிலம் ஒரு வினோதமான மொழி. ஒரே மாதிரியான வார்த்தைகளே உபயோகிக்கும் விதத்தில் பொருள் மாறும். நமது தமிழ் நடிக, நடிகையர் பெரும்பாலான சமயங்களில் பேசும் போது ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 10 வது கூட படித்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் பிடிவாதமாக ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அதில் எவ்வளவு தவறு இருந்தாலும் பரவாயில்லை. ஏனென்றால் தான் பேசுவது தவறு என்று தெரியாமலேயே அவர்கள் பேசுவதுதான் காரணம்.

சில நாட்களுக்கு முன் நடிகர் விவேக்கை ஒரு FM ரேடியோ சேனல் பேட்டி கண்டது. அதில் விவேக் வழக்கம் போல பெரிய பந்தாவுடன் பேசினார். பேட்டி கண்டவர்  விவேக்கிடம் அவருடைய சிவாஜி பட அனுபவத்தைக் கேட்டவுடன் மிக உற்சாகமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான் ரசித்து நடித்த காட்சிகளைக் கூறினார். அதோடு நில்லாமல் ரஜினி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்யும் விதமாக இன்னொன்று கூறியதுதான் அந்த பேட்டியின் விசேஷம்; "சிவாஜி படத்துல ஒரு சீன்ல நானும் சூப்பர் ஸ்டாரும் நடந்து வருவோம், கேமரா என் பக்கத்துல இருக்கும், அப்போ, நான் என்னோட கூலிங் கிளாசை தலைக்கு மேல மாட்டியிருப்பேன், அதை அப்படியே சரிஞ்சு வந்து என் கண்ணு மேல ஒக்கார மாதிரி செஞ்சேன். பிறகு, இந்த காட்சிய மானிட்டர்ல பாக்கும்போது ரஜினி சார், டைரக்டர் ஷங்கர் கிட்ட, சார், இந்த விவேக் கூட நடிக்கும் போது ஜாக்கிரதையாய் நடிக்கணும், இல்லேனா நம்மள எல்லாம் பீட் பண்ணிடுவார்," என்று சொன்னார் சொல்லிவிட்டு, அத்தோடு நிற்காமல், "சூப்பர் ஸ்டாரா இருந்தாகூட ரஜினி ஒரு சிம்பிள்டன் (Simpleton)" என்றார். விவேக் சொல்ல நினைத்தது சூப்பர் ஸ்டார் ஒரு பந்தா இல்லாத சிம்பிள் மனிதர் என்று. அதற்கு, ரஜினி ரொம்ப சிம்பிள் என்று சொல்லியிருக்கலாம். simpleton என்றால் ஆங்கிலத்தில் முட்டாள் என்று பொருள் என்பது விவேக்கிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விவேக் அண்ணே, பார்த்து வார்த்தைகளை யூஸ் பண்ணுங்க.

Comments

விம்பிள்டன் மாதிரி தான் இதுவும் னு நெனச்சுருப்பார்... காமெடி விவேக்..

www.vaasikkalaam.blogpsot.com
Karthik said…
This comment has been removed by the author.
Karthik said…
Boss, Simpleton ku innoru meaningum irukku..
Google Kadavula kelunga..
Simple+ton nu padikkanum simpleton nu sethu padikka kudadhu..
விவேக் நிஜவாழ்க்கையிலும் காமெடியன். ரெட்டை அர்த்த வசனங்களை வச்சி தந்து கிறிஸ்தவ லாபியை வச்சி பத்மஸ்ரீ வாங்கி அந்தப் பட்டத்துக்கே அசிங்கம் தேடித்தந்தவர்..அம்மன் கூழ் ஊத்துறதையும், கிராமத்து கலாச்சாரத்தையும் கிண்டல் அடிப்பார். கிறிஸ்தவ மதம் பத்தி பிரச்சாரம் செய்வார்.. அவர்தான் நம்ம சின்னக் கலைவானர்னு அவரே பட்டம் சூட்டிக்கொண்ட வாயாலேயே கெட்ட விவேக்.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.