Skip to main content

கருப்பு பணம் இந்தியா வந்தால் 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட்!

"இந்தியர்கள், சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்துள்ள பணத்தை இந்தியா கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வரப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட் போடலாம்," என ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி நேற்று தெரிவித்தார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: "இந்தியா பணக்கார நாடு. ஆனால், அதன் ஊழல் தலைவர்களால், இந்தியா ஏழையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள், நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து எடுத்து, சுவிஸ் வங்கியில், 67.50 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம்.

புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி, சுவிஸ் வங்கிக் கணக்கில், 36 ஆயிரத்து 900 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்தார். அவரிடம் இருந்து அரசு, 37 கோடி ரூபாயை வரியாக வசூலித்தது. 2002ம் ஆண்டு, அரசு வரி ஏய்ப்பு செய்து பணத்தை வெளிநாடுகளில் சேமிக்கும் செயலைத் தடுக்க சட்டத்தை உருவாக்கியது. ஆனால், அதில் உள்ள விதிமுறைகள் எதையும், 2005ம் ஆண்டு வரை அரசு செயல்படுத்தவில்லை.

வருமான வரி அதிகாரிகள், ஹசன் அலியின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை, தருமாறு சுவிஸ் வங்கியிடம் கேட்டனர். அப்போது, சுவிஸ் வங்கியினர் அளித்த பதிலில், 'பணமோசடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாங்கள் அனைத்து தகவல்களையும் வழங்க தயார்' என்றனர்.

ஆனால், அதன் பின், 2007ம் ஆண்டு வரை, சுவிஸ் வங்கி அதிகாரிகளுடன் எவ்வித கடித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை இந்தியா கொண்டு வர அரசுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது அதுபற்றி உண்மை தெரியாமல் இருக்க வேண்டும். சுவிஸ் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் குறித்து விசாரிக்க ஏன் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வில்லை. இந்தப் பணம் பற்றி அறிய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். ஆனால், அரசு இந்த விஷயத்தை ரகசியம் என்று கூறி தகவல் தர மறுக்கிறது. அப்படி ரகசியம் என்று கூறுவது மோசடியாகும்"

ராம் ஜெத்மலானி கூறிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இன்னொரு சுலபமான வழியும் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளின் கணக்கில் வராத சொத்துக்களை வெளியில் கொண்டுவந்தால் இன்னும் ஒரு 300 ஆண்டுகளுக்கு வரியே இல்லாமல் பட்ஜெட் போடலாம். இந்தியாவையும் சிங்கப்பூர் போல ஒரு அப்பழுக்கற்ற நாடாக மாற்றிவிடலாம்.

ஆனால் அந்த நிலை வருமா???

-with inputs from Dinamalar.com

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...