Skip to main content

தமிழில் விக்கிப் பீடியா!

தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக இண்டர்நெட்டில் மேய்ந்து வரும் எனக்கு இன்று இந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி ஆச்சரியமாக இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தமிழில் விக்கிப் பீடியா செயல்பட்டு வருகிறது என்ற செய்திதான் அது. நம்மில் பலருக்கு விக்கிப் பீடியா பற்றி தெரிந்திருக்கக் கூடும்.

விக்கிப் பீடியா பல்வேறு மொழிகளில் இருக்கும் ஒரு இலவச என்சைக்ளோ பீடியா. இதில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்துள்ள செய்திகளைத் திருத்தலாம் என ஏராளமான சுதந்திரம் உள்ள ஒரு நல்ல முயற்சி.

இது 2001 இல ஜிம்மி வேல்ஸ் [Jimmy Wales] மற்றும் லேரி சாங்கர் [Larry Sanger]ஆகிய இருவரால் தொடங்கப் பட்டது. இன்று கிட்டத்தட்ட 260 மொழிகளில் உலகெங்கும் பல்வேறு மக்களால் உபயோகிக்கப் படுகிறது.

இதன் தமிழ் பதிப்பு அவ்வளவாக பிரபலம் அடையவில்லை, இது தமிழில் இருப்பதே நிறைய பேருக்குத் தெரியவில்லை என ஆதங்கத்துடன் இந்து நாளிதழில் வந்த செய்தி குறிப்பிட்டிருந்தது. இதன் தமிழ் தளத்துக்கு [http://ta.wikipedia.org] சென்று பார்க்கலாம் என்று முயற்சித்தேன். அரைமணி நேரம் கூட என் ஆர்வம் நீடிக்கவில்லை; காரணம் அதன் தமிழாக்கம்! நடை முறையில் இல்லாத வாக்கியங்களை உபயோகித்து ஏராளமான செய்திகள், ஆனால் எதையுமே நம்மில் பெரும்பாலானோர் படிக்க மாட்டோம்.

முதல் பக்கத்தில் Swine Flu பற்றி செய்தி: பன்றிக் காய்ச்சல் என்று தமிழ் தலைப்பு கொடுத்து அதைப் பற்றி விலாவாரியாக செய்தி. ஓகே, நன்றாக இருக்கிறதே என்று படிக்கத் தொடங்கினால், இரண்டாவது வரியிலேயே தடுக்கியது.

பன்றிக் காய்ச்சல் ஒரு குறிப்பிட்ட "தீ நுண்மத்தினால்" வரும் ஒரு "உயிரிழக்கும் நோய்" என்று குறிப்பிட்டிருந்தது. தீ நுண்மம் என்றால் என்ன என்று உங்களைப் போலவே எனக்கும் தெரிந்து கொள்ள ஆசை. அது virus இன் தமிழாக்கம். அடப்பாவிகளா! virus என்பது என்ன என்பது பலபேருக்குத் தெரியும் போது, அதை வைரஸ் என்று போடாமல் தீ நுண்மம் என்று வாயில் நுழையாத பெயர் எதற்கு? பிறகு அந்த கட்டுரையில் வரும் மற்ற பயமுறுத்தும் சொற்கள்: "கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி [Obligate intracellular parasite]", "கோலுரு நுண்ணுயிர் திண்ணி [Bacteriophage]", "ஓம்புயிர் [host]" இன்னும் பல.

இப்படியெல்லாம் வார்த்தைகளைப் போட்டால் யாரால் இதை படிக்க முடியும்? எப்படி இதை புரிந்துகொள்ள முடியும்? மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி சொல்லுவார்: "அமெரிக்கா செல்லும் பல IT துறையைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கு சிலிகான் வாலியில் [Silicon Valley] வேலைக்குச் சேர்ந்த பிறகு மிகவும் சிரமப் படுகிறார்கள், ஏனென்றால் இதில் தமிழ் மீடியத்தில் படித்த பலபேர் மேலே சொன்ன மாதிரி தேவையில்லாத வார்த்தைகளை தமிழில் கற்றுக் கொண்டு பின் அதற்கு நிகரான ஆங்கில வார்த்தைகள் தெரியாமல் அவதிப் பட நேரிடுகிறது. ஜப்பான், சைனா, ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளில் எல்லோருமே அவரவர் தாய் மொழியில்தான் படிக்கிறார்கள். ஆனால், நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால் நம்மைப் போல அவர்கள் கம்ப்யூட்டரை "கணினி" என்றோ, வைரஸை " தீ நுண்மம்" என்றோ, protoplasm என்பதை "உயிரணுப் பாயாசம்" என்றோ படிப்பதில்லை. இந்த பெயர்ச் சொற்கள் எல்லாம் தமிழ் நாட்டிலேயே பலருக்குப் புரியாதபோது, வெளிநாட்டில் இருப்போருக்கு எப்படிப் புரியும்?

தமிழ் பற்று என்பது முக்கியமான ஒன்று. அது நமக்குத் தேவையான் ஒன்று. ஆனால், வடிவேலு சொல்லுவது போல நமக்கு என் இந்த கொலைவெறி? இப்படி எல்லாம் technical வார்த்தைகளை தமிழ் படுத்தி நம்மை ஏன் படுத்தவேண்டும்?

தமிழ் மொழியே மெல்ல மெல்ல மறந்து வரும் நிலையில் முதலில் நாம் காப்பாற்ற வேண்டியது பேச்சு வழக்கில் உள்ள தமிழை, பிறகு காப்பற்ற வேண்டியது இதைப் போன்ற நடைமுறைக்கு உதவாத தமிழ் சொற்களை; இதை எல்லாம் நான் சொன்னால் உடனே நம் "so called" தமிழ் அறிஞர்கள் என்னை தமிழினத் துரோகி என்று கூட சொல்லலாம், பரவாயில்லை.

தமிழை வளர்க்க வேண்டுமென்றால் தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் கிணற்று தவளைகள் என்ற எண்ணத்தைப் போக்கவேண்டும், இதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை என்பதால் வரும் தாழ்ந்த மனப்பான்மை [inferiority complex] அகல ஆவன செய்ய வேண்டும்.

தமிழ் படிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால், உயிரணு பாயாசம், ஓம்புயிர் போன்ற அபத்தமான வார்த்தைகளை விட்டுவிட்டு, technical வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்திலேயே விட்டுவிட வேண்டும். அதற்குண்டான அர்த்தத்தை தமிழில் சொல்லித் தர எந்த தடையம் இல்லாத போது இதை ஏன் செய்யக் கூடாது?

சத்யராஜ் நடித்து இங்லீஷ்காரன் என்று ஒரு அபத்தமான படம் வந்தது. இதில் ஒரு காட்சியை நான் சமீபத்தில் டிவீயில் பார்த்தேன்; அதில், தமிழ் வார்த்தைகளை எல்லாவற்றுக்குமே பயன்படுத்த முடியாது என்பதை, சத்யராஜ் அவருக்கே உரிய லொள்ளுடன் சொல்லியிருப்பார். நாம் தினசரி பார்க்கும் ஒரு சைக்கிளின் எந்த பாகத்தையும் தமிழில் சொல்ல முடியுமா என்று கேட்பார். அவர் சொல்வதைப் போல pedal, break, handlebar, stand, tyre ஆகிய வார்த்தைகளை அப்படியே தமிழில் உபயோகித்தால் தமிழ் அழிந்து விடாது. அதை விட்டுவிட்டு மிதிப்பான், நிறுத்துவான் என்றெல்லாம் அந்த வார்த்தைகளை ஏன் தமிழ் படுத்த வேண்டும்?

Comments

Swami said…
ரொம்ப சரியா சொன்னீங்க ஸ்ரீதர்! மொழிப்பற்றுக்கும் மொழிவெறிக்கும் வித்தியாசம் தெரியாம போச்சு! ஜப்பான்ல television-க்கு பேரு தெரெபி! Remote Control-க்கு பேரு ரெமொகான்! இப்படி புது வார்த்தைகளை உருவாக்கினாலும் எல்லாமே மூல-வார்த்தைகளை தழுவி பண்ணியிருக்காங்க. அத விட்டுட்டு......

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...