Skip to main content

மும்பை கலவரம்

ராஜ் தாக்ரே ஒரு LKG அரசியல்வாதி. இவர் தேவையில்லாமல் ஒரு கூட்டத்தில் பேசும்போது அமிதாப் பச்சனை வம்புக்கு இழுத்திருக்கிறார். என்னதான் மும்பையிலேயே இவ்வளவு வருடம் இருந்துகொண்டு கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அமிதாப் மும்பைக்கு எதுவும் செய்யவில்லை என்றும், முழுக்க முழுக்க உ.பி மாநிலத்துக்குதான் எல்லாம் செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். பதிலுக்கு அமிதாப் எதுவும் சொல்லாத நிலையில் அவருடைய மனைவி ஜெயா பச்சன் "எங்களுக்கு பால் மற்றும் உதவ் தாக்ரே ஆகியோரைத்தான் தெரியும், இது யார் ராஜ் தாக்ரே?" என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டார்.

உடனே, ராஜ் தாக்ரேயின் குண்டர்கள் மும்பை எங்கும் கலவரம் செய்து கண்ணில் பட்ட மற்ற மாநிலத்தவர்களை உதைத்து, கடைகளை நொறுக்கி, தீவைத்து ஏக கலாட்ட செய்தார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் எல்லா செய்தி ஊடகங்களும் (channels) போட்டி போட்டுக்கொண்டு மும்பையில் பிற மாநிலத்தவர் இருக்கலாமா, வேண்டாமா? என்று கேனத்தனமாக sms contests நடத்தி கல்லா கட்டின. இதைவிட ஒரு கடைந்தெடுத்த அயோக்யத்தனம், முட்டாள்தனம் இருக்க முடியாது. மும்பை என்ன பாகிஸ்தானா?

இதில் ஒரு ராஜ் தாக்ரேயின் ஆதரவாளர் NDTV யில் கூறினார்: "வெளி மாநிலங்களில் இருக்கும் மகாராஷ்ட்ரியர்களுக்கு அவரவரைக் காத்துக்கொள்ள முடியும். ரஜினி எங்கள் மாநிலத்தவர், ஆனால் பாருங்கள் தமிழ் நாட்டில் போய் தமிழ் கற்றுக் கொண்டுதான் பெரிய சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார், ஆனால் இங்கிருக்கும் எந்த தமிழனும் மராத்தி கற்றுக் கொள்வதில்லை" என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை!

கடவுளே, இந்த அரசியல்வாதி (வியாதி)களிடமிருந்து எங்களைக் காப்பாற்று!

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...