சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வணக்கம் எழுத்தாளர் சுஜாதா முகநூல் பக்கம் / புதிய புத்தக அறிமுகம்..... கிட்டத்தட்ட இரண்டரை கால இடைவெளிக்குப் பிறகு உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி.... மறைந்த எழுத்தாளர் சுஜாதா மீதுள்ள அளவிடமுடியாத ஈடுபாட்டால், விளையாட்டாக ஆரம்பித்த சுஜாதா பற்றிய முகநூல் பக்கம் இன்று 11,000 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள குழுவாக ஆலமர வளர்ச்சி கொண்டுள்ளது. நிறைய சுஜாதா வாசகர்கள் தவிர புகழ்பெற்ற எழுத்தாளர்களான இரா.முருகன், சுஜாதா தேசிகன், ( சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி) எழுதிய ரஞ்சன், பழம்பெரும் நடிகர் பாரதி மணி, ஜெயராமன் ரகுநாதன் உள்ளிட்ட பல முக்கிய சுஜாதா ஆர்வலர்களும் இந்தக் குழுவில் இணைத்துள்ளனர். குழு ஆரம்பித்த கடந்த சில மாதங்கள் முன் வரை, சுஜாதா எழுதிய / அல்லது / அவர் பற்றிய பதிவுகளை மட்டுமே இந்த முகநூல் பக்கத்தில் அனுமதித்து வந்தோம். இப்போது, புதியவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் குழு அங்கத்தினர்களின் கதைகள் / கட்டுரைகள் / கவிதைகள் ஆகியவையும் இடம் பெறுகின்றன. குழுவில் இணைய சுட்டி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு இதே ஊக்கத்தில், முதன்முதலாக நானும் ஒர...