Skip to main content

Posts

எங்க ஊரு வாசம் ---பாரத தேவி  உண்மையான கிராமத்து வாழ்க்கை எப்படியிருந்தது, இயந்திரமயமாகி விட்ட வாழ்வில் நாம் என்னவெல்லாம் தொலைத்துவிட்டோம் என நினைத்து பெருமூச்சு விடவைக்கும் ஒரு அருமையான பதிவு..... வாழ்வோடு கலந்த பொங்கல் தைமாதம் பிறக்கப் போகிறது. அதனால் விவசாயிகள் எல்லோரும் ரொம்பவும் மகிழ்ச்சியாயிருந்தார்கள். ஏனென்றால் காடுகளிலும், வயல்களிலும் விளைந்த தானியங்களை எல்லாம் வீடு கொண்டு வந்து சேர்த்தாகிவிட்டது. அவை பெரிய, பெரிய குலுக்கைகளிலும், மூடைகளிலுமா வீடு நிறைந்து இருக்கின்றன. அதோடு இருந்த தட்டை, தாள்களை அறுத்துக்கொண்டு வந்து ஆடு, மாடு தீவனங்களுக்காக உயரமும் நீளமுமான படைப்புகளாக அடுக்கியாகிவிட்டது. பிரிந்தும் தளர்ந்தும் இருந்த மழைக்கு ஒழுகிக்கொண்டு இருந்த கூரை வீடுகளைப் பிரித்து கம்பந்தட்டை, தரகு, பனைஓலை என்று கொண்டுவந்து கச்சிதமாக வேய்ந்துவிட்டது. இனி ஒரு வருடத்திற்கு வீடு ஒழுகுமே என்ற கவலை இல்லை. புதுத் தானியமும், புதுக் கூரையும், புதுப் படப்பின் மணமுமாக மேகாற்றோடு வீசி கிராமம் எங்கும் மணம் பரப்ப, விவசாயிகளும், அவர்களின் குடும்பங்களும் நெஞ்சு நிறைய சுவாசித...

கம்பீரமாக நிற்கிறது கல்லணை!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு - 7  இயற்கைச் சீற்றங்கள் உலகுக்குப் புதிது அல்ல. நம் முன்னோர்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் போராடியே கடந்தார்கள். அந்த போராட்டங்களில் இயற்கையின் இயல்புகளை கண்டுகொண்டார்கள். அதற்கேற்ப தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தார்கள். இயற்கை யுடன் இசைந்து வாழ்ந்தார்கள். விலங்குகளும் கூட நுண்ணறிவின் மூலம் இயற்கை சீற்றங் களை முன்கூட்டியே உணர்ந்து கொள் கின்றன. ஆனால், செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் நாம்தான் சாலைகளில் படகு விடுகிறோம்.  ஆனால், 2500 ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மாண்டமாக ஓடிய நைல் நதியை மனிதர்கள் கையாண்ட விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. எகிப்து நாட்டின் ஒரே ஜீவாதாரம் நைல் நதி மட்டுமே. நைல் நதியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை வெள்ளம் பெருக்கெடுக்கும். அதற்கு முன்னதாகவே ஆற்றின் இரு கரைகளிலும் 3 மீட்டர் வரை ஆழம் கொண்ட பெரிய பாத்திகளை வெட்டி விடுவார்கள். இப்படி ஆயிரக்கணக்கான பாத்திகள் வெட்டப்பட்டு, கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டன. இவை வெள்ளம் ஊருக்குள் புகாமல் பாதுகாத்தன. இதில் சேகரமாகும் தண்ணீர் இரு மாதங்கள் வ...

சென்னையின் சேதத்துக்கு காரணம் என்ன?

 ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு - 6 கார்கள் சென்ற சாலையில் படகுகள் சவாரி  ஏரிகளிலும், நீர்நிலைகளிலும் வீடுகள் முளைத்ததின் விபரீத விளைவு அடையாறு - வெள்ளப் பெருக்கு   எங்கெங்கு காணிலும் தண்ணீரடா சென்னையின் வெள்ளம் வழிந்த பாடில்லை. மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யிருப்பதாக எச்சரிக்கிறது வானிலை மையம். ஏரிக்கரை மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கூனிக்குறுகி ஓடிய கூவமும் அடையாறு ஆறும் சீறிப் பாய்வதை மக்கள் மிரட்சியோடு பார்க்கின்றனர். உயிர்ப்பலி உயர்ந்து கொண்டே செல்கிறது.  ஆனால், சென்னைக்கு புயல் புதிது அல்ல. காலம்காலமாக கடும் புயல்களை தாங்கியது அது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு தாக்குதலின்போதும் சென்னை தன் னைத் தானாக தகவமைத்துக் கொண்டது. முதல் உலகப் போர் காலகட்டம்வரை இது நீடித்தது. அதன் பிந்தைய நகர மயமாக்கல்தான் சென்னையின் இயல் பான நீரோட்டத்தை சிதைக்கத் தொடங்கியது.  சென்னையின் அடிப்படை அமைப்பைப் பார்ப்போம். இங்கு ஆண்டு சராசரி மழையளவு 1,100 மில்லி மீ...

உங்கள் நிதி நிலையை பாதுகாக்கும் 5 ‘உ’க்கள்!

அ ன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கும், நமது முன்னேற்றத்துக்காக வைத்திருக்கும் உடைமைகளுக்கும் காப்பீடு எடுத்து வைப்பது அவசியம்!   தமிழில் ‘உ’ என்ற எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதாவது எந்த ஒன்றையும் எழுத ஆரம்பிக்கும் போது ‘உ’ என்கிற பிள்ளையார் சுழி போட்டு தான் நம்மில் பலர் ஆரம்பிக்கிறோம். நமது வாழ்க்கையில் ஐந்து ‘உ’க்கள் மிக முக்கியமானவை. முதல் உ – உயிர் பாதுகாப்பு இரண்டாம் உ -  உடல் நல பாதுகாப்பு. மூன்றாம் உ  – உடைமை பாதுகாப்பு. நான்காம் உ – உணர்வுப்பூர்வமான நிதித் திட்டமிடல் ஐந்தாம் உ – உயில் இந்த ஐந்து ‘உ’க்களில் ஏதேனும் ஒன்றை நம் வாழ்க்கையில் செய்யத் தவறினாலும், அதுவே வாழ்க்கை முன்னேற்றத்தில் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி, அதனால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த ஐந்து உ-க்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். முதல் ‘உ’ உயிர் பாதுகாப்பு!   மனித  வாழ்க்கையின் முழு அங்கம் உயிர். அது இல்லை  எனில் எதுவும் இல்லை. மனித உயிருக்கு பாதுகாப்பு நம் நாட்டில் மிக மிகக் குறைவு. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் ஆர...

உங்களுக்கு டயபடிஸா…? – சுஜாதாவின் அட்டகாசமான பதில்கள்/விளக்கங்கள் !!!

தலைவர் மறைந்திருக்கலாம். அவர் எழுத்துக்கள் என்றும் சிரஞ்சீவியானவை தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா, மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் விதத்தில் நான் எழுத விரும்புவது டயபடிஸ் பற்றி…( ஜூனியர் விகடன் 2003 ) ?உலகத்தில் டயபடிஸ்காரர்கள் எத்தனை பேர் ? !பதினேழரை கோடி. இன்னும் ஐந்து வருஷத்தில் இருபத்துநாலு கோடியாகப் போகிறது! இந்தியாவில்? போன வியாழக்கிழமை கணக்கிட்டபடி, நாலு கோடி இந்தியர்கள் டயபடிஸ்காரர்கள். அது 2010க்குள் பதினொன்றரைக் கோடியாகப் போகிறதாம்! உலகின் டயபடிஸ் தலைநகரம் இந்தியாதான் என்கிற சந்தேகத்துக்குரிய பெருமை நமக்கு உண்டு. ?எனக்கு டயபடிஸ் இருந்தால், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ? !சுலபம். போன தடவை பார்த்ததற்கு, இந்தத் தடவை கொஞ்சம் சுருங்கித் தெரிவீர்கள். காபிக்கு ஷுகர் போடலாமா என்று கேட்டால், சற்று தாமதித்துக் கொஞ்சம் போடலாம் என்பீர்கள். நொறுக்குத் தீனி கொண்டு வைத்தால், க...

உணர்வால் இணைந்த மக்கள்... உயிர் பெற்ற ஏரிகள்!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு- 5 சேர்வராயன் மலையில் தொலை நோக்கி பார்வை மையத்துக்கு மேலே மலை உச்சியில் இருக் கிறது ஒரு முகடு. அங்கிருந்து பார்த்தால் சேலம் மாவட்டம் முழுவதையும் கழுகுப் பார்வையில் காணலாம். 20 ஆண்டு களுக்கு முன்பு அங்கிருந்து பார்க்கும் போது கீழே சுமார் 60 ஏரிகள் சூரிய வெளிச்சம் பட்டு நீல வண்ணத்தில் ஜொலிக்கும். பூமித் தாய்க்கு நீலக்கல் அணிவித்தது போன்று கண்கொள்ளாக் காட்சி அது!  நிரம்பி வழியும் மூக்கனேரி, சேலம்   இப்போது அங்கு சென்று பார்த்த போது அந்த நீலக்கற்கள் பெருமளவு களவு போயிருந்தன. 10 ஏரிகளைக்கூட பார்க்க முடியவில்லை.  சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் மன்னார் பாளையம், கருப்பூர், வாழப்பாடி ஆகிய மூன்று பிரதான வழிகளில் வழிந்தோடி சங்கிலித் தொடர் ஏரிகளை நிரப்பிச் சென்றது. மன்னார்பாளையம் வழியாக வழிந்த தண்ணீர் திருமணிமுத்தாறு கால்வாய்கள் மூலம் கன்னங்குறிச்சி - புது ஏரி, மூக்கனேரி, சக்கிலி (பேராந்தி) ஏரி, அச்சுவான் ஏரி, பள்ளப்பட்டி ஏரி, தாதுபாய் குட்டை, பஞ்சந்தாங்கி ஏரி, பச்சைப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி, எருமாபாளை...

படகு சவாரி முன்னே... பாசனம் பின்னே! !!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு- 4 பழந்தமிழர் ஏரிகளைப் பராமரிக்க தனி வாரியம் அமைத்தனர். குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கரை பராமரிப்பு, கலுங்கு பராமரிப்பு, காவல், நீர் பங்கீடு இவையெல்லாம் ஏரி வாரியத்தின் பணி. ஏரி வாரியத்தினர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏரிகளில் மேடிட்ட மண்ணை தூர் வாரினர். இது ‘குழி குத்துதல்’ என்று அழைக்கப்பட்டது. ஏரி வாரியம் மட்டுமின்றி பாசனத்தைப் பராமரிக்க கழனி வாரியம், வயல் வழிகளைப் பராமரிக்க தடிவழி வாரியம், வரி வசூலைப் பராமரிக்க பஞ்ச வாரியம் என்றெல்லாம் குழுக்கள் அமைக்கப்பட்டன.    ஏரிகளைப் பராமரிப்பதற்கான செலவுகள், தானம் மற்றும் மானியமாக வழங்கப்பட்ட நிலங்களின் பாசன வருவாயில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலங்கள் ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’, ‘ஏரிப்பட்டி’ என்று அழைக்கப்பட்டன. ஏரியில் மீன் பிடிப்போர் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஏரி பராமரிப்புக்காக அளிக்க வேண்டும். இது ‘பாசிப் பட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மீன் பிடிப்போர், சலவைத் தொழில் செய்வோர் பகலில் ஏரியை காவல் காத்தனர். இரவு காவலுக்கு தன...